அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவை தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் சொன்ன மெசேஜ்!

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் நடந்த இரு அரசு விழாக்களில் பங்கேற்ற, தமிழக முதல்வர் ஸ்டாலின் ''திட்டங்களை அறிவித்தோம்; போனோம் என்றில்லாமல், ஆய்வு நடத்தி விரைவுபடுத்தவே, செந்தில் பாலாஜியை நியமித்திருக்கிறோம். உழைக்கக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுத்து, உங்கள் மாவட்டத்துக்கு ஒப்படைத்திருக்கிறோம்,'' என்றார்.முதல்வரின் இப்பேச்சு, கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனெனில்,

கோவை: கோவையில் நடந்த இரு அரசு விழாக்களில் பங்கேற்ற, தமிழக முதல்வர் ஸ்டாலின் ''திட்டங்களை அறிவித்தோம்; போனோம் என்றில்லாமல், ஆய்வு நடத்தி விரைவுபடுத்தவே, செந்தில் பாலாஜியை நியமித்திருக்கிறோம். உழைக்கக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுத்து, உங்கள் மாவட்டத்துக்கு ஒப்படைத்திருக்கிறோம்,'' என்றார்.முதல்வரின் இப்பேச்சு, கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனெனில், சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் கோவை வந்த ஸ்டாலினை, விமான நிலையத்தில் இருந்து வ.உ.சி., மைதானம் வரை வரவேற்க, 10 தொகுதிகளை சேர்ந்த கட்சியினருக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. எந்த ஏரியாவில் வரவேற்பு 'டல்'லாக இருக்கிறது என்பதை கண்டறிந்து, கட்சியை பலப்படுத்த இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும், கடந்த சட்டசபை தேர்தலில், கட்சியினர் உள்ளடி வேலை செய்த காரணத்தாலேயே, தோல்வி கிடைத்தது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.
வேட்பாளர்களில் சிலர், அவர்களது ஓட்டுச்சாவடியிலேயே இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, சில நிர்வாகிகள் மீது தலைமைக்கு நம்பகத்தன்மை போனதால், கரூரை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்.விழாவில் முதல்வர் பேசியது தொடர்பாக, தி.மு.க.,வினர் கூறுகையில், 'கட்சியை வளர்ப்பதோடு, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும்.
மக்களிடம் நற்பெயர் பெற வேண்டும். தி.மு.க., ஆட்சி மீதான நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும். இதுநாள் வரை, கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையில் பயணித்து வந்தனர். அவர்களை ஒருங்கிணைத்து ஒரே பாதையில் அழைத்துச் செல்ல, ஒருவரை, கட்சி தலைமை அடையாளம் காட்டியிருக்கிறது.உழைப்பவரை உங்கள் மாவட்டத்துக்கு ஒப்படைத்திருக்கிறோம் என முதல்வர், விழா மேடையில் வெளிப்படையாக பேசியிருப்பது, இங்குள்ள நிர்வாகிகள் பலரும் பல விதத்தில் சுணக்கமாக இருப்பதை அறிந்து, சுட்டிக்காட்டியிருப்பதாக நினைக்கிறோம். இனியாவது கட்சியை வளர்க்க, நிர்வாகிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்' என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X