அரசியல் செய்தி

தமிழ்நாடு

நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை : அமைச்சர் காந்தி தகவல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:'ஜவுளி தொழிலை பாதுகாக்கும் வகையில், நுால் விலையை கட்டுக்குள் வைக்க, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' என, கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.தள்ளுபடிநுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதில் அளித்து, அமைச்சர் காந்தி விடுத்துள்ள அறிக்கை:

சென்னை:'ஜவுளி தொழிலை பாதுகாக்கும் வகையில், நுால் விலையை கட்டுக்குள் வைக்க, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' என, கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.


தள்ளுபடி

நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதில் அளித்து, அமைச்சர் காந்தி விடுத்துள்ள அறிக்கை: அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில், தள்ளுபடி மானிய திட்டத்தின் கீழ், கடந்த ஆட்சியில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு விடுவிக்கப்படாமல் இருந்த, தள்ளுபடி மானிய தொகையை விடுவிக்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இது தவிர, கடந்த ஆட்சியின் நிலுவை தள்ளுபடி மானிய தொகை, 160.11 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.கைத்தறி நெசவாளர்களின் நெசவுக்கான அடிப்படை கூலியில் 10 சதவீதம்; அகவிலைப்படியில் 10 சதவீதம், ஒட்டு மொத்தமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீது விதிக்கப்பட்டு வந்த, 1 சதவீதம் விவசாய விற்பனை குழு செஸ் வரியை, முழுமையாக ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு நுாற்பாலைகளில், உதிரி பாகங்களை மாற்ற, 2019ல் 2.07 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப் பட்டது. எதிர்க்கட்சி தலைவர், 2,076 கோடி ரூபாய் விடுவித்ததாக தவறான தகவல் தெரிவித்து உள்ளார்.இலவச வேட்டி சேலை திட்டத்திற்கான அரசாணை, ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்டது.


வேலைவாய்ப்பு

அதன்படி, 1.80 கோடி சேலைகள், 1.80 கோடி வேட்டிகளுக்கான உற்பத்தி துவக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கம், தென்னிந்திய சிறு நுாற்பாலைகள் சங்கம் உள்ளிட்ட நுாற்பாலை துறையினருடன், நேற்றுமுன்தினம் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. நுால் விலையை குறைக்கவும், வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு, தேவையான நுாலை தடையின்றி வழங்கவும், நுாற்பாலை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
ஒட்டு மொத்த ஜவுளி தொழிலை பாதுகாக்கும் வகையில், நுால் விலையை கட்டுக்குள் வைக்கவும், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை தொழிலாளர்களுக்கு, தொடர் வேலை வாய்ப்பை உறுதி செய்யவும், தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X