செய்தி செய்தி

தமிழ்நாடு

தலை இல்லாத ஆட்டுக்குட்டி லிங்காபுரத்தை பற்றியது பரபரப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: லிங்காபுரத்தில் தலை துண்டித்த நிலையில், ஒரு ஆட்டுக்குட்டியும், துண்டிக்காத நிலையில் ஒரு ஆட்டு குட்டியும், மூன்று நாய்களும் இறந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிறுமுகை அடுத்த லிங்காபுரம் கிராமம், வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. இக்கிராம மக்களில் பெரும்பாலானவர்கள் ஆடு வளர்த்து வருகின்றனர். இந்த வனப்பகுதியில் யானைகளும்,

மேட்டுப்பாளையம்: லிங்காபுரத்தில் தலை துண்டித்த நிலையில், ஒரு ஆட்டுக்குட்டியும், துண்டிக்காத நிலையில் ஒரு ஆட்டு குட்டியும், மூன்று நாய்களும் இறந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிறுமுகை அடுத்த லிங்காபுரம் கிராமம், வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. இக்கிராம மக்களில் பெரும்பாலானவர்கள் ஆடு வளர்த்து வருகின்றனர். இந்த வனப்பகுதியில் யானைகளும், சிறுத்தையும் நடமாட்டம் அதிகளவில் உள்ளன.இந்நிலையில் நேற்று மாலை லிங்காபுரம் கிராமத்தின் நுழைவாயில் பகுதியில், தலை துண்டித்த நிலையில் ஒரு ஆட்டு குட்டியும், துண்டிக்காத நிலையில் மற்றொரு ஆட்டு குட்டியும் இறந்து கிடந்தன. அதே பகுதியில் சிறிது துாரத்தில், மாரிமுத்து என்பவரின், மூன்று நாய் குட்டிகளும் இறந்து கிடந்தன. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X