தமிழ்நாடு

பின்னலாடை துறையை பாதுகாக்க நாளை 'பந்த்'

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: பின்னலாடை தொழிலை பாதுகாப்பதற்காக, அனைத்து அமைப்பினர் சார்பில், திருப்பூரில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வேடந்தாங்கலாக திகழ்கிறது, திருப்பூர். பின்னலாடை உற்பத்தி தொழில் துறை வளர்ச்சியே, உள்நாட்டிலும், உலக அரங்கிலும், திருப்பூருக்கு தனித்துவம்

திருப்பூர்: பின்னலாடை தொழிலை பாதுகாப்பதற்காக, அனைத்து அமைப்பினர் சார்பில், திருப்பூரில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வேடந்தாங்கலாக திகழ்கிறது, திருப்பூர். பின்னலாடை உற்பத்தி தொழில் துறை வளர்ச்சியே, உள்நாட்டிலும், உலக அரங்கிலும், திருப்பூருக்கு தனித்துவம் பெற்றுத்தந்துள்ளது.அதிகரிக்கும் விலைபஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதையடுத்து ஆடை உற்பத்திக்கு பிரதான மூலப்பொருளான நுால் விலையும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது.வர்த்தக போட்டிகள் அதிகரிப்பால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாப விகிதம் குறைந்துகொண்டே செல்கிறது.நுால் விலை அதிகரிப்பு, ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.ஆடை உற்பத்தி செலவினங்கள் உயர்ந்துள்ளநிலையில், வெளிமாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து பெறப்பட்ட ஆர்டர் மீது ஆடை தயாரிப்பது சிக்கலாகிறது; புதிய ஆர்டர்களை பெறுவதும் சவாலாகிறது.117 அமைப்பு ஆதரவுபஞ்சு மற்றும் நுால் விலையை கட்டுப்படுத்தி, தொழில் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), அனைத்து தொழில் அமைப்பினரை ஒருங்கிணைத்து, பின்னலாடை தொழில் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.இந்த கூட்டமைப்பு சார்பில், திருப்பூரில் நாளை (26ம் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. பின்னலாடை உற்பத்தி, ஜாப்ஒர்க் சார்ந்த சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், சரக்கு போக்குவரத்து சங்கம் என, மொத்தம் 117 சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபடுகின்றன.உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி; நிட்டிங், டையிங் பிரின்டிங் என அனைத்துவகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்துகின்றன. கடைகள் அடைக்கப்படுகின்றன; தியேட்டர்களில் காட்சிகள் ரத்தாகிறது.பின்னலாடை சரக்குகளை கொண்டுசெல்லும் வாகனங்களும் இயக்கத்தை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. முழு அடைப்பு போராட்டத்தால், பனியன் நகரின், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் முடங்கும்.உண்ணாவிரதம்மாநகராட்சி அலுவலகம் முன்பு, நாளை காலை, 9:30 முதல் மாலை, 6:00 மணி வரை, உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில், பின்னலாடை உற்பத்தி சங்கங்கள் உட்பட ஆதரவு அளித்துள்ள அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X