தமிழ்நாடு

தலைக்கு 2 கிலோ தக்காளி மட்டும்! திருமண நிகழ்ச்சிக்கு வாங்க பத்திரிகை கட்டாயம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: கோவை உழவர் சந்தையில் நபர் ஒருவருக்கு, 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, வியாபாரிகளுக்கு வேளாண் வணிக அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.கோவையில் தக்காளி சீராக பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், பதுக்கலை தடுக்கவும், தோட்டக் கலை துறையினர், கடந்த இரண்டு நாட்களாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை துணை வேளாண் இயக்குனர் (வேளாண்



பெ.நா.பாளையம்: கோவை உழவர் சந்தையில் நபர் ஒருவருக்கு, 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, வியாபாரிகளுக்கு வேளாண் வணிக அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.கோவையில் தக்காளி சீராக பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும், பதுக்கலை தடுக்கவும், தோட்டக் கலை துறையினர், கடந்த இரண்டு நாட்களாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை துணை வேளாண் இயக்குனர் (வேளாண் வணிகம்) சுந்தரவடிவேலு கூறியதாவது:மழையால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வுக்கு சென்றபோது, நேரில் பார்த்தோம். தக்காளி தட்டுப்பாடு காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில், நபர் ஒருவருக்கு இரண்டு கிலோ தக்காளி மட்டுமே வழங்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளோம்.உழவர் சந்தையில் மொத்தமாக தக்காளியை யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு திருமண பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை முறைப்படி சமர்ப்பித்தால் மட்டுமே அதிக அளவில் தக்காளி வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X