துளிகள் செய்தி

தமிழ்நாடு

உயர் விளைச்சல் கொண்டைக்கடலை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
பல்லடம்: உயர் விளைச்சல் தரும் கொண்டைக்கடலை குறித்து, பல்லடம் வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயறு வகை திட்டத்துக்கு உட்பட்டு, நடப்பு ராபி பருவத்தில் கொண்டைக்கடலை தொகுப்பு செயல்விளக்க திடல், பல்லடம் வட்டாரத்தில், 75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.இது தொடர்பான, முதற்கட்ட பயிற்சி வகுப்பு, பல்லடம் அடுத்த

பல்லடம்: உயர் விளைச்சல் தரும் கொண்டைக்கடலை குறித்து, பல்லடம் வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயறு வகை திட்டத்துக்கு உட்பட்டு, நடப்பு ராபி பருவத்தில் கொண்டைக்கடலை தொகுப்பு செயல்விளக்க திடல், பல்லடம் வட்டாரத்தில், 75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.இது தொடர்பான, முதற்கட்ட பயிற்சி வகுப்பு, பல்லடம் அடுத்த கரடிவாவி கிராமத்தில் நடந்தது. மாவட்ட துணை வேளாண்மை இயக்குனர் வடிவேலு தலைமை வகித்தார். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மாவட்ட திட்ட ஆலோசகர் அரசப்பன் மற்றும் பல்லடம் வேளாண் உதவி இயக்குனர் பாலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மண் வளம் மேம்பட, தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, மண் பரிசோதனை செய்ய வேண்டும்.உரமிடல், சொட்டு நீர் பாசனம், கூட்டு பண்ணையம், மற்றும் அதன் பயன்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. கொண்டைக்கடலை உற்பத்தி அதிகரிக்க, கோடை உழவு அவசியம்.விதை, மற்றும் வேர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துதல், இயற்கை உரங்கள் பயன்படுத்துதல், பயறு வகை நுண்ணூட்டம் இடுதல், தொழு உரம் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றால், உயர்ரக கொண்டைக்கடலை விளைச்சலை பெறமுடியும் என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.தேசிய உணவு பாதுகாப்பு திட்ட தொழில்நுட்ப அலுவலர் கிருத்திகா, துணை வேளாண் அலுவலர் நடராஜன் உட்பட, வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X