தமிழ்நாடு

தி.மு.க.,வும், ஊழலும், நாணயத்தின் இரு பக்கம்! திருப்பூரில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா காட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: ''தி.மு.க.,வும், ஊழலும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்,'' என்று, திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.திருப்பூர் பா.ஜ., மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, நேற்று நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் நட்டா திறந்து வைத்தார். ஈரோடு, திருநெல்வேலி மற்றும் திருப்பத்துார் மாவட்ட அலுவலகங்களை, காணொலியில் திறந்து
 தி.மு.க.,வும், ஊழலும், நாணயத்தின் இரு பக்கம்!  திருப்பூரில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா காட்டம்



திருப்பூர்: ''தி.மு.க.,வும், ஊழலும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்,'' என்று, திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.திருப்பூர் பா.ஜ., மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, நேற்று நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் நட்டா திறந்து வைத்தார். ஈரோடு, திருநெல்வேலி மற்றும் திருப்பத்துார் மாவட்ட அலுவலகங்களை, காணொலியில் திறந்து வைத்தார்.பொதுக்கூட்டத்தில், நட்டா பேசியதாவது:தமிழகம் புனிதமான பூமி. பக்தி நிறைந்த பூமி. கலாசார பெருமைக்கு இந்த மாநிலம் உதாரணம். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என, கணியன் பூங்குன்றனார் கூறியுள்ளார். 'எங்கும் வளம் பெறுக, எங்கும் மகிழ்ச்சி பெருக' என்று நாம் சொல்கிறோம்.நம் கட்சிப்பணி சீராக கட்டமைக்கப்படுகிறது. அலுவலக திறப்பு மூலம் நாம், நம் இயக்கத்தை வலுவாக்குகிறோம்.
மோடியின் தொலைநோக்கு பார்வையால் பா.ஜ., வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு இந்த கட்டடங்களே சாட்சி.இந்தியாவில், 720 மாவட்டங்களில் கட்சி அலுவலகம் அமைக்க திட்டம் தீட்டினோம். இதுவரை, 473 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களிலும் பணிகள் நடக்கிறது. பா.ஜ., அலுவலகம், 24 மணிநேரமும், ஆண்டு முழுவதும் செயல்படும்.தி.மு.க., என்றால் ஊழல் கட்சி. தி.மு.க.,வும், ஊழலும், நாணயத்தின் இரண்டு பக்கங்கள். வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது. ஆனால், பா.ஜ.,வில் அப்படியில்லை. இங்கு மேடையில் இருப்பவர்கள் எவ்வித பின்புலத்திலும் இல்லாதவர்கள்.பிரதமர் மோடி, வளர்ச்சியை மட்டும் மனதில் வைத்துள்ளார். விளிம்பு நிலையில் இருப்பவர்களை மோடி முன்னேற்ற நினைக்கிறார். ஜன்தன் யோஜனா திட்டத்தில், தமிழகத்தில் 94 லட்சம் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.கொரோனா காலத்தில், மூன்று முறை தலா, 500 ரூபாய் என, நாடு முழுவதும், 24 கோடி பெண்களுக்கு தலா 1,500 ரூபாய் வழங்கப்பட்டது. தூய்மை பாரதம் இயக்கத்தில், 11 கோடி கழிப்பறைகள் நாடு முழுவதும் கட்டி முடிக்கப்பெற்று பயன்பெற்றுள்ளனர்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்தில், 11 மருத்துவ கல்லுாரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வரலாற்று சாதனையை செய்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X