செய்தி செய்தி

தமிழ்நாடு

மாவட்ட மிக இளையோர் கபடி அணியில் விளையாட விருப்பமா? 

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மிக இளையோர் கபடி அணிக்கான தேர்வு வரும், 27ல் மாவட்ட கபடி அலுவலக மைதானத்தில் நடக்கிறது. பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் அறிக்கை:திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் வரும், 27 ம் தேதி, மதியம், 2:00 மணிக்கு, மிக இளையோர் கபடி அணி தேர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மிக இளையோர் கபடி அணிக்கான தேர்வு வரும், 27ல் மாவட்ட கபடி அலுவலக மைதானத்தில் நடக்கிறது. பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் அறிக்கை:திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் வரும், 27 ம் தேதி, மதியம், 2:00 மணிக்கு, மிக இளையோர் கபடி அணி தேர்வு நடக்கவுள்ளது. 2006 ஜன., 1ம் தேதிக்கு பின் பிறந்தவர், 16 வயதுக்கும் கீழ் உள்ளவர் பங்கேற்கலாம்.போட்டியாளர் எடை, 55 கிலோவுக்குள் இருக்க வேண்டும். ஆதார், பள்ளி சான்றிதழ் அல்லது பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒரிஜினல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். தேர்வு செய்யப்படும் அணி டிச., 2ம் தேதி சேலத்தில் நடக்கும் மாநில மிக இளையோர் கபடி போட்டியில் திருப்பூர் சார்பாக பங்கேற்கும்.அத்துடன், டிச.,28 முதல், 31ம் தேதி வரை ஜார்க்கண்ட்டில் நடக்கும் தேசிய மிக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு, மாநில கழகம் சார்பில் அழைத்து செல்லப்படுவர். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X