செய்தி செய்தி

தமிழ்நாடு

பனியன் நிறுவன விடுதியில் பெண் தொழிலாளி தற்கொலை

Added : நவ 24, 2021
Share
Advertisement
அவிநாசி: பனியன் நிறுவன விடுதியில் உ.பி., பெண் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிப்புதுார் பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இதில், உ.பி.. மாநிலத்தை சேர்ந்தவர் நிர்மலா, 27. நேற்று முன்தினம் மாலை விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீசார் கூறியதாவது:தற்கொலை செய்து

அவிநாசி: பனியன் நிறுவன விடுதியில் உ.பி., பெண் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிப்புதுார் பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இதில், உ.பி.. மாநிலத்தை சேர்ந்தவர் நிர்மலா, 27. நேற்று முன்தினம் மாலை விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீசார் கூறியதாவது:தற்கொலை செய்து கொண்ட நிர்மலா, கடந்த, 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக பணிக்கு செல்லவில்லை. 23ம் தேதி பணிக்கு சென்ற அவரை, பிரிவு மேற்பார்வையாளர், பணிக்கு அனுமதிக்கவில்லை; விடுமுறை எடுத்ததற்காக திட்டியும் உள்ளார் என கூறப்படுகிறது.எனவே, மாற்றுப்பணி வழங்கும் வரை காத்திருக்குமாறு அவர் கூறியதால், மனமுடைந்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். உ.பி.,யில் உள்ள நிர்மலாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்தபின் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நிர்மலாவுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்கள் கூறுகையில், 'மேலதிகாரிகளின் 'டார்ச்சர்' காரணமாக தான், நிர்மலா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்,' என்றனர். ஆனால், இதனை பனியன் நிறுவன நிர்வாகிகள் மறுத்தனர். தொழிலாளி தற்கொலை குறித்து, அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X