செய்தி செய்தி

தமிழ்நாடு

ஆர்.ஐ., அலுவலக வளாகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் 'ஸ்டாக்'

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று, இரண்டாவது அலை பரவியிருந்த போது, மூச்சுவிட முடியாதபடி, திணறியபடி வந்தவர்களுக்கு, அவசர சிகிச்சை அளிக்க, ஆக்சிஜன் தேவைப்பட்டது. பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி, மாவட்ட நிர்வாகமே, பல இடங்களில்

திருப்பூர்: வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று, இரண்டாவது அலை பரவியிருந்த போது, மூச்சுவிட முடியாதபடி, திணறியபடி வந்தவர்களுக்கு, அவசர சிகிச்சை அளிக்க, ஆக்சிஜன் தேவைப்பட்டது. பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி, மாவட்ட நிர்வாகமே, பல இடங்களில் இருப்பு வைத்திருந்தது.திருப்பூர் மாநகராட்சி பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக, 90 ஆக்சிஜன் சிலிண்டர்கள், நல்லுாரில் இருப்பு வைக்கப்பட்டன. பயன்படுத்தி முடித்த பிறகு, காலி சிலிண்டர்கள், நல்லுார் சமுதாயக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது.ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு வைத்ததால், பொதுமக்கள், விழா நிகழ்ச்சிகளுக்கு, சமுதாயக்கூடத்தை பயன்படுத்த இயலவில்லை. இதுகுறித்து தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.எம்.எல்.ஏ., உத்தரவுப்படி, ஆக்சிஜன் சிலிண்டர்கள், திருப்பூர் தெற்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மூன்றாவது அலை பரவும் அபாயம் இருப்பதால், மக்கள் இன்னும் கொரோனா அச்சத்தில் இருந்து மீண்டுவரவில்லை.இந்நிலையில், திடீரென ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்திறங்கியதால், அரிசிக்கடை வீதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் தொற்று பரவுகிறதா என, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,'நல்லுார் சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்காக, சிலிண்டர்கள் எடுத்து வரப்பட்டன. அனைத்து சிலிண்டர்களையும், சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்க, கடிதம் அளித்துள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X