அரசு பள்ளிகளில் புகார் பெட்டி!| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் புகார் பெட்டி!

Added : நவ 24, 2021
Share
திருப்பூர்: பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திருப்பூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் புகார் பெட்டி நேற்று வைக்கப்பட்டது.பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் ரீதியான குற்றங்கள் குறிப்பாக, பள்ளிகளில் அடுத்தடுத்த சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாலியியல்

திருப்பூர்: பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திருப்பூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் புகார் பெட்டி நேற்று வைக்கப்பட்டது.பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் ரீதியான குற்றங்கள் குறிப்பாக, பள்ளிகளில் அடுத்தடுத்த சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாலியியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், பள்ளிகள் தோறும் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்த திருப்பூர் எஸ்.பி., செஷாங் சாய் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.மேலும், நேரடியாக புகார் தெரிவிக்க இயலாத, தயங்கும் மாணவியருக்கு, பள்ளிகள்தோறும் புகார்ப்பெட்டி கட்டாயம் வைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் வினீத் நேற்று முன்தினம் உத்தரவிட்ட நிலையில், திருப்பூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று புகார் பெட்டி வைக்கப்பட்டது.இதுகுறித்து ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறியதாவது:பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைப்பது குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர், ஆசிரியர்கள் அடங்கிய தற்காலிக குழுவை நாங்களே உருவாக்கியுள்ளோம்.புகார் அளிக்கலாம்!மாணவியருக்கு, '1098' மற்றும், '14417' ஆகிய இலவச உதவி எண் அச்சிட்டப்பட்டு புகார் பெட்டி வைத்துள்ளோம். இதில் மாணவிகள் தங்கள் பிரச்னைகளை தயக்கமின்றி எழுதிப்போடலாம்.பள்ளிக்கு செல்லும் போதும், வழியில் கேலி, கிண்டல் யாராவது செய்தாலோ, பாலியியல் ரீதியான சீண்டல்களால் பாதிக்கப்பட்டாலோ தைரியமாக தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.இல்லையேல் மனுவாக புகார்ப்பெட்டியில் போடலாம். இதனை, பள்ளியின் குழந்தைகள் பாதுகாப்பு குழு, தக்க முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். எந்த வகையிலும் மாணவியர் பெயர்கள் வெளியே வராது.இவ்வாறு, அவர் கூறினார்.மாணவியருக்கு, '1098' மற்றும், '14417' ஆகிய இலவச உதவி எண் அச்சிட்டப்பட்டு புகார் பெட்டி வைத்துள்ளோம். இதில் மாணவிகள் தங்கள் பிரச்னைகளை தயக்கமின்றி எழுதிப்போடலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X