தமிழ்நாடு

விசைத்தறி கூலி உயர்வில் உடன்பாடு: கோவையில் பேச்சுவார்த்தை சுமுகம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் இரண்டு அமைச்சர்கள் தலைமையில் நடந்த விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சோமனுார், பல்லடம், மங்கலம், அவிநாசி, கண்ணம்பாளையம், பெருமாநல்லுார், வேலம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரியதை தொடர்ந்து ஜவுளி



கோவை: கோவையில் இரண்டு அமைச்சர்கள் தலைமையில் நடந்த விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சோமனுார், பல்லடம், மங்கலம், அவிநாசி, கண்ணம்பாளையம், பெருமாநல்லுார், வேலம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரியதை தொடர்ந்து ஜவுளி உற்பத்தியாளர்கள் உடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
ஆனால், ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை.முதல்வர் உத்தரவுப்படி இரு தரப்பினர் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வகையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பேச்சு நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி தலைமையில், திருப்பூர் கலெக்டர் வினித், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தொழிலாளர் இணை கமிஷனர் லீலாவதி முன்னிலையில் பேச்சு நடந்தது.இந்த பேச்சுவார்த்தையில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் அனைத்து தரப்பினர் கருத்துக்களும் விரிவாக கேட்டு அறியப்பட்டது.இதன்அடிப்படையில், 2014ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட கூலி உயர்வுடன் சோமனுார் ரகத்துக்கு, 23 சதவீதமும், பிற ரகங்களுக்கு, 20 சதவீதமும் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டு, டிச., 1ம் தேதி முதல் வழங்க வேண்டும் என, அறிவித்து பேச்சுவார்த்தை சுமுகமாக முடிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X