செய்தி செய்தி

தமிழ்நாடு

பள்ளி விளையாட்டு மைதானங்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி விளையாட்டு மைதானங்களின் பரப்பளவுகளையும் பிரத்யேக 'கூகுள்' செயலியை மூலமாக அளவீடு செய்து அனுப்புமாறு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பாட அறிவு தாண்டி, உடல் மற்றும் மனதிற்கு வலிமை சேர்க்கும் விளையாட்டுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.இதற்குரிய மைதானங்கள், வசதிகள் பள்ளிகள்தோறும்

திருப்பூர்: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி விளையாட்டு மைதானங்களின் பரப்பளவுகளையும் பிரத்யேக 'கூகுள்' செயலியை மூலமாக அளவீடு செய்து அனுப்புமாறு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பாட அறிவு தாண்டி, உடல் மற்றும் மனதிற்கு வலிமை சேர்க்கும் விளையாட்டுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.இதற்குரிய மைதானங்கள், வசதிகள் பள்ளிகள்தோறும் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களின் வசதிகள், மைதான பரப்பளவுகளின் சரியான அளவீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரவீந்திரனின் கூறியதாவது:அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், முதலில் 'https://play.ggogle.com/store.apps/details?id=com.dewdev.lat.longfinder_full_final' என்ற இணையதள முகவரியைக கிளிக் செய்து, 'Longitude, Latitude finder' எனும் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.தங்கள் விளையாட்டு மைதானத்தின் மத்தியில் நின்று கொண்டு, அச்செயலிக்குள் நுழைந்து, 'current location' கொடுத்து அதில் வரக்கூடிய, 'Longitude, Latitude decimal' அளவை அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X