பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு: தொடரும் மழையால் பாதிப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:தொடர்ந்து மழை பெய்வதால், பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணி தாமதமாகிறது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது.பல்வேறு மாவட்டங்களில், நெல் மட்டுமின்றி பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு

சென்னை:தொடர்ந்து மழை பெய்வதால், பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணி தாமதமாகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது.பல்வேறு மாவட்டங்களில், நெல் மட்டுமின்றி பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.
திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில், காய்கறிகள், கீரைகள், மூலிகை பயிர்கள், பழ மரங்கள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன.வடகிழக்கு பருவமழையால், பலவகை பயிர்களும் நீரில் மூழ்கிஉள்ளன.பயிர் பாதித்த நெல் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்து உள்ளதோடு, சம்பா பருவ நெல் சாகுபடி மறுநடவுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மற்ற பயிர்களுக்கு இன்னும் நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த கணக்கெடுப்பை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையினர் இன்னும் முடிக்காதே இதற்கு காரணம். தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாதிக்கப்படும் பயிர்களின் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.எனவே, மழை ஓய்ந்த பின் இறுதிக்கட்ட கணக்கெடுப்பை முடித்து, அரசிடம் அறிக்கை வழங்க வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையினர் முடிவெடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X