தமிழ்நாடு

அரசு பஸ் கவிழ்ந்து 13 பேர் காயம் அவிநாசி அருகே விபத்து

Added : நவ 24, 2021
Share
Advertisement
அவிநாசி: தமிழ்நாடு அரசு விரைவு பஸ், அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் காய மடைந்தனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து நேற்றிரவு, 9:30 மணிக்கு புறப்பட்டு, கோவை நோக்கி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, அவிநாசி எம்.நாதம்பாளையம் பிரிவு பகுதியில் வந்தபோது, நிலை தடுமாறி, ஆறு
 அரசு பஸ் கவிழ்ந்து 13 பேர் காயம் அவிநாசி அருகே விபத்து

அவிநாசி: தமிழ்நாடு அரசு விரைவு பஸ், அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் காய மடைந்தனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து நேற்றிரவு, 9:30 மணிக்கு புறப்பட்டு, கோவை நோக்கி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, அவிநாசி எம்.நாதம்பாளையம் பிரிவு பகுதியில் வந்தபோது, நிலை தடுமாறி, ஆறு வழிச்சாலையின் மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலை பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், ஐந்து பெண்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலருக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.அரசு பஸ் டிரைவர் ராகவன், பஸ்சை ஓட்டி வந்துள்ளார். பஸ்சை ஒரு கார் முந்திச்சென்ற போது, நிலை தடுமாறி மையத் தடுப்பின் மீது பஸ் மோதி கவிழ்ந்ததாக டிரைவர் கூறினார். ஆனால், டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தான் விபத்து நேரிட்டது என, பயணிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X