தமிழ்நாடு

பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்; பா.ஜ., தலைவரிடம் தொழில் துறையினர் மனு

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: ஜி.எஸ்.டி., வரி விகிதம், மூலப்பொருள் விலை உயர்வு உட்பட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி தரக்கோரி, ஜே.பி., நட்டாவிடம், திருப்பூர் பின்னலாடை துறையினர் முறையிட்டனர்.திருப்பூர் வந்த பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி., நட்டாவை, ெஷரீப் காலனியில் உள்ள, முன்னாள் எம்.பி., சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டில், திருப்பூர் பின்னலாடை துறையினர் சந்தித்தனர்.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்

திருப்பூர்: ஜி.எஸ்.டி., வரி விகிதம், மூலப்பொருள் விலை உயர்வு உட்பட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி தரக்கோரி, ஜே.பி., நட்டாவிடம், திருப்பூர் பின்னலாடை துறையினர் முறையிட்டனர்.திருப்பூர் வந்த பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி., நட்டாவை, ெஷரீப் காலனியில் உள்ள, முன்னாள் எம்.பி., சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டில், திருப்பூர் பின்னலாடை துறையினர் சந்தித்தனர்.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் பழனிசாமி, இணை செயலாளர் செந்தில்குமார், சாய
ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் ஆகியோர், நட்டாவை சந்தித்து அளித்த மனு:தொழிலளர் வசதிக்காக, குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.ஆயத்த ஆடை, பிரின்டிங், டையிங் ஜாப்ஒர்க் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி., வரி, வரும் ஜனவரி மாதம் முதல் 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.உள்ளாடை ரகங்களுக்கு நடைமுறையில் உள்ள 5 சதவீத வரி விகிதம் தொடர வேண்டும்; இதர ஆடைகளுக்கு மட்டும் 12 சதவீத வரி விதிக்கலாம். மூலதனம் பெருமளவு முடங்கும் என்பதால், பிரின்டிங், ஜாப்ஒர்க் சேவைக்கான வரியை 12 சதவீதமாக உயர்த்த கூடாது; 5 சதவீதமாக தற்போதைய விகிதத்திலேயே தொடரச் செய்யவேண்டும்.மூலப்பொருளான பருத்தி, நுால் விலையை கட்டுப்படுத்த வேண்டும். அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, நிறைவேற்றித்தரவேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X