துளிகள் செய்தி

தமிழ்நாடு

மாநில கராத்தே போட்டி பல்லடம் மாணவர்கள் அபாரம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
பல்லடம்: மாநில அளவிலான கராத்தே போட்டியில், பல்லடத்தில் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.சேலத்தில், சைசோ காய் கராத்தே அமைப்பின் சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. 5 முதல் 18 வயது வரையிலான, 250 மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதில், பல்லடம் வட்டார பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியரும் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.பல்லடம் அமேசிங் பள்ளியை சேர்ந்த ஜோத்ஸ்னா;

பல்லடம்: மாநில அளவிலான கராத்தே போட்டியில், பல்லடத்தில் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.சேலத்தில், சைசோ காய் கராத்தே அமைப்பின் சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. 5 முதல் 18 வயது வரையிலான, 250 மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதில், பல்லடம் வட்டார பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியரும் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.பல்லடம் அமேசிங் பள்ளியை சேர்ந்த ஜோத்ஸ்னா; ஆதர்ஸ் பள்ளியை சேர்ந்த காவியா ஆகியோர் கட்டா பிரிவில் தங்கம் வென்றனர். கீ ஸ்டேஜ் பள்ளியை சேர்ந்த சஷ்டிகா வெள்ளி வென்றார். கண்ணம்மாள் பள்ளியை சேர்ந்த ரிதன்யா, கோகுல், ஸ்ரீநிமலன், ஆகியோர் மற்றும் அபின் ராஜ் ஆகியோர் குமிட்டே பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை சென்சுகன் கராத்தே பயிற்சியாளர் ராமமூர்த்தி, தலைமை பயிற்சியாளர் சந்தான கிருஷ்ணன் மற்றும் போட்டி அமைப்பாளர்கள் சரவணன், முத்துராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X