செய்தி செய்தி

தமிழ்நாடு

தக்காளி பதுக்கல் தடுக்க... அதிரடி நடவடிக்கை அவசியம்!

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: வரத்து குறைவால் விலை உயர்ந்த போதும், தக்காளியை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்துக்கு விற்க சிலர் முயற்சிப்பதால், செயற்கை தட்டுப்பாடு காரணமாக விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.திருப்பூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 110 ரூபாய்க்கும், தென்னம்பாளையம், தினசரி மார்க்கெட்டில், 130 ரூபாய், சில்லறை விற்பனை மளிகை கடைகளில், 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.விலை

திருப்பூர்: வரத்து குறைவால் விலை உயர்ந்த போதும், தக்காளியை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்துக்கு விற்க சிலர் முயற்சிப்பதால், செயற்கை தட்டுப்பாடு காரணமாக விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.திருப்பூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 110 ரூபாய்க்கும், தென்னம்பாளையம், தினசரி மார்க்கெட்டில், 130 ரூபாய், சில்லறை விற்பனை மளிகை கடைகளில், 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.விலை உயர்ந்திருப்பதால், நிறமே வராத பச்சை தக்காளி, சற்று பெரியதாகும் முன்பே பொடி பழங்களை கூட பறித்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.ஒருபுறம் இப்படி இருக்க, கர்நாடகாவில் இருந்து திருப்பூர் மொத்த மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி பழங்களை பெரிய வியாபாரிகள் சிலர் குடோன்களில் பதுக்கி வைத்துள்ளனர். அன்றைய நாளின் விற்பனைக்கே தட்டுப்பாடு வரும் அளவு மட்டுமே தக்காளி வந்துள்ளது என வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கின்றனர். தக்காளி விற்று தீர்ந்து விட்டால், அடுத்த சில நிமிடங்களில் குடோன்களில் இருந்து எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர்.இவ்வாறு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், ஏ.பி.டி., ரோடு, கருவம்பாளையம், உழவர் சந்தை, மார்க்கெட்டை ஒட்டிய பகுதியில் குடோன்களில் தக்காளி இருப்பு குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும்.பதுக்கலில் ஈடுபடுவோரை போலீசார் எச்சரிக்க வேண்டும். பதுக்கி வைத்துள்ள தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தால், நிலை மாறும் என்பதால், கலெக்டர் தாமதமின்றி இந்நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X