செய்தி செய்தி

தமிழ்நாடு

குளமே, குடியிருப்பு ஆனது!

Added : நவ 24, 2021
Share
Advertisement
பொங்கலுார்: பொங்கலுார் அலகு மலையில் உற்பத்தியாகும் உப்புக்கரை நதி ஆலாம்பாளையம், உப்பு கரைப்பாளையம், குளத்துப்பாளையம், பெரியாரியபட்டி, தங்காய் புதூர், படியூர் ஆனைகுழி மேடு வழியாக சென்று ராமலிங்கபுரம் என்ற இடத்தில் நொய்யல் நதியுடன் இணைகிறது.நொய்யல் நதிக் கரை நாகரீகம் வளர்ந்து இருந்த காலத்தில், உப்புக்கரை நதியிலும் நாகரீகம் செழித்திருந்தது. அதற்கான எச்சங்கள்

பொங்கலுார்: பொங்கலுார் அலகு மலையில் உற்பத்தியாகும் உப்புக்கரை நதி ஆலாம்பாளையம், உப்பு கரைப்பாளையம், குளத்துப்பாளையம், பெரியாரியபட்டி, தங்காய் புதூர், படியூர் ஆனைகுழி மேடு வழியாக சென்று ராமலிங்கபுரம் என்ற இடத்தில் நொய்யல் நதியுடன் இணைகிறது.நொய்யல் நதிக் கரை நாகரீகம் வளர்ந்து இருந்த காலத்தில், உப்புக்கரை நதியிலும் நாகரீகம் செழித்திருந்தது. அதற்கான எச்சங்கள் இன்றளவும் காணக்கிடக்கின்றன. சுட்ட செங்கற்கள், முதுமக்கள் தாழி, கொல்லன் பட்டறை கற்கள், தங்கக் காசுகள், சுற்றிலும் கற்களை நட்டு இறந்தவர்களை புதைத்த அடையாளங்கள் உள்ளன.இது நொய்யலின் பெரிய கிளை நதி என்று புகழப்படுகிறது. இது உற்பத்தியாகும் அலகுமலை கைலாசநாதர் கோவில் அருகில் குளம் உள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்த குளத்திற்கு தண்ணீர் செல்கிறது.இரண்டாவதாக உள்ள குளத்தை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கூட்டுச் சேர்ந்து நத்தம் புறம்போக்காக மாற்றி சிலருக்கு பட்ட வழங்கியுள்ளனர். மேலும், பலர் பட்டா இல்லாமல் அங்கு வீடுகளைக் கட்டி குடியிருந்து வருகின்றனர். மேலும், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.பொங்கலூர் அவிநாசி பாளையத்தில் கடந்த வாரம் பெய்த மழையால் வீடுகளில் சிக்கியவர்களை படகு மூலம் மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.கடந்த, 20 ஆண்டுகளாக அலகுமலை பகுதியில் போதிய மழை இன்மையால் குளம் நிரம்ப வில்லை. இங்கு அதிக மழை ஒரேநேரத்தில் பெய்யும் பட்சத்தில் வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிடும். முறைகேடாக நீர்வழி புறம்போக்கை நத்தமாக வகை மாற்றம் செய்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக உள்ளனர்.தங்கள் தவறை உணர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி நத்தம் பட்டாவை ரத்து செய்யாவிட்டால் அங்கு மேலும் பல குடியிருப்புகள் வந்துவிடும்.இயற்கை தன் பாதையை தானே மீட்டெடுத்தால் பொருட்சேதத்துடன் அசம்பாவிதங்களும் தவிர்க்க முடியாததாகிவிடும்.கடந்த, 20 ஆண்டுகளாக அலகுமலை பகுதியில் போதிய மழை இன்மையால் குளம் நிரம்ப வில்லை. இங்கு அதிக மழை ஒரேநேரத்தில் பெய்யும் பட்சத்தில் வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X