செய்தி செய்தி

தமிழ்நாடு

எவ்வளவு மாணவருக்கு, எவ்வளவு ஆசிரியர்கள்?

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில், பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி இணை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய அறிக்கை:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை

திருப்பூர்: இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில், பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி இணை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய அறிக்கை:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பள்ளிகளில், 60 மாணவர்கள் வரையில் - 2 ஆசிரியர்கள், 61 - 90 மாணவர்கள் வரை - 3 ஆசிரியர்கள், 91 முதல் -120 மாணவர்கள் வரை - 4 ஆசிரியரகள், 121 - 200 மாணவர்கள் வரை - 5 ஆசிரியர்கள் என ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்கப்பட வேண்டும்.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளிகளில், ஒரு வகுப்பில், 35 மாணவர்கள் இருப்பின் ஒரு பிரிவாக கணக்கிட்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யவும். ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை, 50க்கு அதிகமானால் அவ்வகுப்பினை இரண்டாக பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்தலாம். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப்பள்ளியில் குறைந்த பட்ச மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம், 5 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.ஒன்பது, பத்தாம் வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை, 60க்கும் அதிகமாகும் போது, இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும். மேலும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஓர் ஆசிரியருக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம், 25 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஆங்கில வழிதமிழ் வழி கல்வியில் ஆசிரியர் நிர்ணயம் செய்வது போலவே, ஆங்கில வழி கல்வியிலும் பின்பற்றப்பட வேண்டும். ஆங்கில வழி பிரிவுகளில் ஒரு வகுப்பிற்கு குறைந்தபட்சம், 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.அதற்கும் குறைவாக இருப்பின் அக்குழந்தைகளை அருகாமையில் செயல்படும் ஆங்கில வழி பிரிவுகள் உள்ள பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.உபரி ஆசிரியர்ஒரு பள்ளியில் குறிப்பிட்ட பாடத்தில் உபரி ஆசிரியர் இருப்பின் பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் கடைசியாக அப்பள்ளியில் பணியில் சேர்ந்த இளையவரை தலைமை ஆசிரியர் உபரி ஆசிரியர் பட்டியலில் சேர்த்து பணி நிரவலுக்கு அனுப்ப வேண்டும். மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்தல் அவசியம்.இவ்வாறு, அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X