நுால் விலை அதிகரிப்பு பிரதமருக்கு கோரிக்கை மனு| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

நுால் விலை அதிகரிப்பு பிரதமருக்கு கோரிக்கை மனு

Added : நவ 25, 2021
Share
திருப்பூர்: நுால் விலை உயர்வு தொடர்பாக, பிரதமர், முதல்வருக்கு மனு அளிக்க 'டிட்மா' முடிவு செய்துள்ளது.நுால் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி., 12 சதவீதம் உயர்வு தொடர்பாக 'டிட்மா' சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ராயபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில், சங்க தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் தேவராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், துணை

திருப்பூர்: நுால் விலை உயர்வு தொடர்பாக, பிரதமர், முதல்வருக்கு மனு அளிக்க 'டிட்மா' முடிவு செய்துள்ளது.நுால் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி., 12 சதவீதம் உயர்வு தொடர்பாக 'டிட்மா' சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ராயபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில், சங்க தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் தேவராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், துணை செயலாளர் முத்து கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், நுால் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., உயர்வு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, நுால் விலை குறைக்க மற்றும் ஜி.எஸ்.டி., உயர்வு குறைப்பதுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுக்கு வலியுறுத்துவது, பிரதமர், முதல்வர், ஜவுளித்துறை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.,வுக்கு, மனு அளிக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X