துளிகள் செய்தி

தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வரிடம் மனு

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்தி, பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வரிடம் மனு அளித்தனர்.பகுதி நேர ஆசிரியர்களின், பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து, கடந்த பிப், மாதம் முதல் 10 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்பட்டது.தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, மகளிருக்கான

திருப்பூர்: பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்தி, பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வரிடம் மனு அளித்தனர்.பகுதி நேர ஆசிரியர்களின், பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து, கடந்த பிப், மாதம் முதல் 10 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்பட்டது.தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, மகளிருக்கான மகப்பேறு விடுமுறை போன்ற எந்தவொரு அடிப்படை விதிகளும் இவர்களுக்கு இல்லை.மிகக்குறைந்த ஊதியத்தால் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயலாமல் மிகுந்த மன உளைச்சலில் தவித்து வந்தனர். வாரத்துக்கு, மூன்று நாள் பணி என்பது கற்பித்தலுக்கு போதுமானதாக இல்லை என்பதால், பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமாக மாற்ற, பத்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.திருப்பூருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினிடம், மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள், அவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.அதில், 'பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் அறிவித்த நிலையில், அதற்கு நன்றி தெரிவித்தும், விரைவில் அதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும்' எனவும் தெரிவித்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X