துளிகள் செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வுக்கு தயாராகும் கல்வித்துறை

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: நடப்பாண்டு பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பொதுத்தேர்வு நடத்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில், மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.கொரோனாவால், கடந்த இரு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் 'ஆல்பாஸ்' அறிவிக்கப்பட்டது.தற்போது இயல்பு நிலைய திரும்பிய நிலையிலும், பள்ளி நேரடி

திருப்பூர்: நடப்பாண்டு பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பொதுத்தேர்வு நடத்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில், மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.கொரோனாவால், கடந்த இரு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் 'ஆல்பாஸ்' அறிவிக்கப்பட்டது.தற்போது இயல்பு நிலைய திரும்பிய நிலையிலும், பள்ளி நேரடி வகுப்புகள் துவங்கிய நிலையிலும், நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த நேரத்தில் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணி இணையதளம் வாயிலாக விரைவில் துவங்கப்பட உள்ளன. இதற்கான ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கணினி பயிற்றுனர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இவர்களே, அரசு தேர்வுகள் துறையால் நடத்தப்படும் அனைத்து அரசு தேர்வுகளுக்கும், இணையதளம் மூலம் மேற்கொள்ளும் பணிக்கு அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X