அரசியல் செய்தி

தமிழ்நாடு

' போக்குவரத்து தொழிலாளர்களுக்குஊதிய உயர்வு வழங்க வேண்டும்'

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:''போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஓய்வூதிய பயன்கள், ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேலாகி உள்ள நிலையில், போக்குவரத்து கழகங்களில், பிரச்னைகள் முன்பை விட அதிகமாக உள்ளன. கடன் சுமை அதிகரித்து கொண்டே

சென்னை:''போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஓய்வூதிய பயன்கள், ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேலாகி உள்ள நிலையில், போக்குவரத்து கழகங்களில், பிரச்னைகள் முன்பை விட அதிகமாக உள்ளன. கடன் சுமை அதிகரித்து கொண்டே செல்கிறது. பஸ்களை பராமரிக்க தேவையான உதிரி பாகங்களுக்கு, நிதி இல்லாத சூழ்நிலை நிலவுவதால், பஸ்கள் நடு வழியில் நிற்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன.
இலவச பயணங்களால், நடத்துனர்களுக்கான படியாக வழங்கப்படும் பணம் கணிசமாக குறைந்துள்ளது.வழித்தட மாற்றுப்பணி, இலகுப் பணி வழங்குதல் உள்ளிட்ட நடைமுறைகளில், ஊழல் தலைவிரித்து ஆடுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டது; அதை நிறைவேற்றவில்லை.
மதுரையில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பஸ் டிரைவர், தனியார் வாகனத்துக்கு வழி கொடுக்க வில்லை எனக்கூறி, அதன் டிரைவர், அரசு பஸ் டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கி, கையில் ரத்தக் காயத்தை ஏற்படுத்தியது மன வேதனை அளிக்கிறது.அரசு பஸ் டிரைவர்களுக்கு, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.எனவே, அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்னைகளை தீர, முதல்வர் விசாரிக்க வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய, அகவிலைப்படி, ஓய்வூதிய பயன்கள், ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்.முறைகேடுகளை களைய வேண்டும்; கடன் சுமையை குறைக்க வேண்டும். உதிரி பாகங்கள் வாங்க நிதி ஒதுக்க வேண்டும்.இலவச பயணம் காரணமாக, கண்டக்டர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டவும், சட்டத்தை மீறி செயல்படுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X