போலீஸ் டைரி 'ஆன்லைன்' ரம்மியில் பணம் 'கோட்டை' திருப்பூரில் வாலிபர் துாக்கில் தற்கொலை

Added : நவ 25, 2021
Share
Advertisement
சாக்கடையில் விழுந்து பலிதிருப்பூர், கஞ்சம்பாளையம் சாக்கடை கால்வாயில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், போயம்பாளையம் அருகேயுள்ள குருவாயூரப்பன் நகரை சேர்ந்த ஆண்டவர், 56, என்பதும் மனைவி மற்றும் மகன்கள் இருப்பது தெரியவந்தது. குடி போதையில் சாக்கடையில், விழுந்து இறந்தது தெரியவந்தது.வாகனம் மோதி

சாக்கடையில் விழுந்து பலிதிருப்பூர், கஞ்சம்பாளையம் சாக்கடை கால்வாயில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், போயம்பாளையம் அருகேயுள்ள குருவாயூரப்பன் நகரை சேர்ந்த ஆண்டவர், 56, என்பதும் மனைவி மற்றும் மகன்கள் இருப்பது தெரியவந்தது. குடி போதையில் சாக்கடையில், விழுந்து இறந்தது தெரியவந்தது.வாகனம் மோதி வாலிபர் பலிதிருப்பூரில், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி, கொடியம்பாளையத்தை சேர்ந்தவர் சந்துரு, 21. இவர் நேற்று முன்தினம் ஊத்துக்குளியில் இருந்து கொடியம்பாளையம் நால் ரோடு நோக்கி டூவீலரில் சென்றார். அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், டூவீலர் மீது மோதி விட்டு சென்றது. விபத்தில் காயமடைந்த சந்துரு பரிதாபமாக இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர், நவ. 25-


திருப்பூரில், 'ஆன்லைன்' ரம்மியில், பணத்தை இழந்த விரக்தியில் வாலிபர் துாக்குமாட்டி இறந்தார்.திருப்பூர், பாளையக்காடு, ராஜமாதா நகரை சேர்ந்தவர் சுரேஷ், 37. பனியன் தொழிலாளி. இவரது மனைவி மீனா.தம்பதியருக்கு, ஆறு மற்றும் எட்டு வயதில் மகள்கள் உள்ளனர். இவர் திருப்பூரில் வீடு கட்ட, ஐந்து லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தார்.கடந்த, இரண்டு ஆண்டுகளாக, 'ஆன்லைனில்' ரம்மி ஆடி வந்தார். அதில், வீடு கட்ட சேமித்து வைத்திருந்த, ஐந்து லட்சம் ரூபாயை இழந்தார். இதன் காரணமாக மனமுடைந்து இருந்து வந்த சுரேஷ், நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் துாக்குமாட்டி இறந்தார்.சடலத்தை கைப்பற்றி வடக்கு போலீசார் விசாரித்ததில், கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். அதில், 'ஆன்லைன்' சீட்டாட்டத்தில் பணத்தை இழந்து விட்டேன்.எனக்கு வாழ தகுதியில்லை. குடும்பத்தினர் என்னை மன்னித்து விடுங்கள்,' என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து, வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X