அரசியல் செய்தி

தமிழ்நாடு

நுால் விலையை குறைக்க பழனிசாமி வலியுறுத்தல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:'நுால் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தின் 45 சதவீத நுாற்பாலைகள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் உள்ளன. கடந்த 10 மாதங்களில், அனைத்து நுால் ரகங்களுக்கும், கிலோவுக்கு 120 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.இந்த மாதம் முதல் வாரத்தில் அனைத்து

சென்னை:'நுால் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தின் 45 சதவீத நுாற்பாலைகள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் உள்ளன. கடந்த 10 மாதங்களில், அனைத்து நுால் ரகங்களுக்கும், கிலோவுக்கு 120 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.இந்த மாதம் முதல் வாரத்தில் அனைத்து ரகங்களுக்கும், கிலோவுக்கு அதிரடியாக 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள், ஆயத்த ஆடைகள், பின்னலாடை தயாரிப்பாளர்கள், மாவட்டம் தோறும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.எனவே, ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தினர், கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் போன்றவற்றை அழைத்து பேசி, அவர்கள் குறைகளை போக்க வேண்டும்.
இறக்குமதி பஞ்சுக்கான வரியை குறைக்கவும், மூலப்பொருள் ஏற்றுமதியை தடை செய்யவும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்சு, நுால் பதுக்கலை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுால் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும், 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை முழுமையாக ரத்து செய்ய, ஜி.எஸ்.டி., குழு கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். இலவச வேஷ்டி, சேலை தயாரிப்பதற்கான நுாலை, நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X