நடமாடும் உளவியல் மையம் புத்துயிர் அளிக்கப்படுமா!| Dinamalar

தமிழ்நாடு

நடமாடும் உளவியல் மையம் புத்துயிர் அளிக்கப்படுமா!

Added : நவ 25, 2021
Share
கோவை: பள்ளி மாணவிகள் தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையிலும், நடமாடும் உளவியல் மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவராமல், மவுனம் சாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தும் நோக்கில், 2013ல், நடமாடும் உளவியல் மையத்தை, அப்போதைய அ.தி.மு.க., அரசு கொண்டுவந்தது. மொத்தம், 10 உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, மூன்று மாவட்டங்களை ஒரு

கோவை: பள்ளி மாணவிகள் தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையிலும், நடமாடும் உளவியல் மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவராமல், மவுனம் சாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தும் நோக்கில், 2013ல், நடமாடும் உளவியல் மையத்தை, அப்போதைய அ.தி.மு.க., அரசு கொண்டுவந்தது. மொத்தம், 10 உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, மூன்று மாவட்டங்களை ஒரு மண்டலமாக பிரித்து, பள்ளிகளுக்கு செல்ல வாகனம் வழங்கப்பட்டது.அரசுப்பள்ளிகளுக்கு நேரில் சென்று, மாணவர்களின் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் அளிப்பதோடு, 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு, புகார்கள் வரும்போது, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ ரீதியாக சிகிச்சை அளிப்பது, இம்மையத்தின் பணி. கடந்த செப்., மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டும், தற்போது வரை இம்மையம் செயல்பாட்டுக்கு வரவில்லை.நடமாடும் உளவியல் மைய ஆலோசகர் நிர்மல்குமார் கூறுகையில்,'' பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முறையாக கவுன்சிலிங் வழங்கி, உடல் ரீதியான பாதிப்பால், மனஅழுத்தத்திற்கு ஆட்படாமல், சிகிச்சை அளித்தால் மட்டுமே, தற்கொலை எண்ணங்கள் ஏற்படாது. இதற்கு மாவட்டத்திற்கு, ஒரு நடமாடும் உளவியல் மையம், அமைக்கப்பட வேண்டும். மாநிலம் முழுக்க, 10 மையங்களே இருந்தும், தற்போது வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இத்திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X