அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதிவாரி கணக்கெடுப்பு: தீர்மானம் நிறைவேறுமா?

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:'வரும் சட்டசபை கூட்டத்தொடரில், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை:சமூகநீதியை நிலைநாட்ட, 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது,

சென்னை:'வரும் சட்டசபை கூட்டத்தொடரில், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:சமூகநீதியை நிலைநாட்ட, 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, வரவேற்கத்தக்க நடவடிக்கை.
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான், பா.ம.க.,வின் நிலைப்பாடு. இதற்காக மத்திய - மாநில அரசுகளை, கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதற்கு ஆதரவான நிலைப்பாட்டையே தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறது.
இதை மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் வகையில், வரும் சட்டசபை கூட்டத் தொடரில், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X