பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாவது சிலிண்டரை 5 கிலோவில் வாங்க வாய்ப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:'இரண்டு சிலிண்டர் இணைப்பு பெற்றிருப்பவர்கள், இரண்டாவது சிலிண்டரை தங்கள் விருப்பப்படி, 5 கிலோ எடையிலும் வாங்கி கொள்ளலாம்' என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, தமிழகத்தில் 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு 14 கிலோ எடையில் சிலிண்டர் வினியோகம்

சென்னை:'இரண்டு சிலிண்டர் இணைப்பு பெற்றிருப்பவர்கள், இரண்டாவது சிலிண்டரை தங்கள் விருப்பப்படி, 5 கிலோ எடையிலும் வாங்கி கொள்ளலாம்' என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, தமிழகத்தில் 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு 14 கிலோ எடையில் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.அந்நிறுவனம் தினமும் சராசரியாக, 2.50 லட்சம் சிலிண்டர்களை டெலிவரி செய்கிறது.
வீடுகளில் 14.20 கிலோ எடையில் சிலிண்டர் பயன்படுத்தி வரும் நிலையில், அது காலியாகும் இறுதி கட்டத்தின் போது, அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்கின்றனர்.இரண்டாவது சிலிண்டரும், 14.20 கிலோ எடையில் டெலிவரி செய்யப்படுகிறது.இம்மாதம் வீட்டு சிலிண்டர், 915.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், ஏழை மக்கள் சிலிண்டர் வாங்க சிரமப்படுகின்றனர். எனவே, இரண்டாவது சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது, 5 கிலோ எடையில் பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இம்மாதம் வீட்டிற்கான 5 கிலோ காஸ் சிலிண்டர் விலை 337 ரூபாய்.காஸ் பயன்பாடு குறைவாக உள்ளவர்களில், இரண்டு சிலிண்டர் இணைப்பு பெற்று, 14.20 கிலோவில் ஒரு சிலிண்டர் பயன்படுத்தும் பட்சத்தில், அடுத்த சிலிண்டரை அதே எடைக்கு பதில், 5 கிலோ எடையில் பெறலாம்.
இதனால், அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. இதற்கு பதிவு செய்யும் போதே, விரும்பிய எடையை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X