குறைகளை கூறுவோம் தீர்வு காண்போம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
தெருநாய்கள் தொல்லைஅருப்புக்கோட்டை நகர் முழுவதும் தெருநாய்கள் கட்டுபாடின்றி சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்துகின்றன. இதை நகராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த வேண்டும்.கந்தசாமி, அருப்புக்கோட்டை.நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுதெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. மழை காலமாக இருப்பதால் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது.பிச்சைபாண்டி, நகராட்சி சுகாதார

தெருநாய்கள் தொல்லைஅருப்புக்கோட்டை நகர் முழுவதும் தெருநாய்கள் கட்டுபாடின்றி சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்துகின்றன. இதை நகராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த வேண்டும்.கந்தசாமி, அருப்புக்கோட்டை.நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுதெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. மழை காலமாக இருப்பதால் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது.பிச்சைபாண்டி, நகராட்சி சுகாதார ஆய்வாளர், அருப்புக்கோட்டை.-----------சாக்கடையை துார்வாரலசிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரில் சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி சுகாதார க்கேட்டை ஏற்படுத்துகிறது.கமலேஷ், சிவகாசி.நடவடிக்கை எடுக்கப்படும்சாக்கடை துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர்,சிவகாசிசேதமடைந்த ரோடால் அவதிசிவகாசி அனுப்பங்குளத்திலிருந்து நாராயணபுரம் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. வாகனங்களில் செல்லும் மக்கள் அவதி அடைகின்றனர்.முத்து, அனுப்பங்குளம்.நடவடிக்கை எடுக்கப்படும்ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கவிதா, ஊராட்சி தலைவர்.வி.ஏ.ஓ., கட்டடத்தில் விஷபூச்சிகள்காரியாபட்டி பாம்பாட்டியில் வி.ஏ.ஓ.,அலுவலக கட்டடம் சேதமடைந்து விஷபூச்சிகளின் புகலிடமாக மாறி வருகிறது.ரவி, பாம்பாட்டி.நடவடிக்கை எடுக்கப்படும்சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.காளிமுத்து, பாம்பாட்டி ஊராட்சி தலைவர்.பயன்படுத்த முடியாத சுகாதார வளாகம்நரிக்குடி அ.முக்குளத்தில் சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் சுகாதார வளாகம் இருந்தும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. செந்தில்நாதன், அ.முக்குளம்.தண்ணீர் வசதி ஏற்படுத்தபடும்தண்ணீர் வசதி ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.தங்கபாண்டியன், ஊராட்சி தலைவர், அ.முக்குளம்ரோடு வசதி இல்லைஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபாலபுரம் தெற்கு தெருவில் முறையான ரோடு வசதி இல்லை. இதனால் சகதியாகி மக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது.ராஜ்குமார், அச்சம்தவிர்த்தான்.நடவடிக்கை எடுக்கப்படும்நேரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.சிவகுமார், ஸ்ரீவில்லிபுத்துார் பி.டி.ஓ.,தேங்கும் நீரால் சுகாதாரக் கேடுசாத்துார் எஸ்.ஆர்.,நாயுடு நகரில் மழைநீர் வடிகால் இல்லை. இதனால் மழைநீர் ரோட்டில் பல நாட்கள் தேங்கி இருக்கிறது.குரு, சாத்துார்.நடவடிக்கை எடுக்கப்படும்எஸ்.ஆர்.,நகரில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பரமேஸ்வரன், வெங்கடாசலபுரம் ஊராட்சி தலைவர்.குடிநீர் தட்டுபாடுஆலம்பட்டி கிராமத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் ஆகிறது. இதனால் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது.மணி, சாத்துார்.நடவடிக்கை எடுக்கப்படும்குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி கூடுதல் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.மல்லிகா, ஊராட்சி தலைவர், கத்தாளம்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X