மீண்டும் குப்பை பாயின்ட்கள் : பன்றிகள், நாய்கள் தொல்லையால் குமுறும் மக்கள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
விருதுநகர்- விருதுநகர் நகராட்சி பகுதிகளில் மீண்டும் உருவெடுக்கும் குப்பை பாயின்ட்களால் பன்றிகள், நாய்கள் தொல்லை அதிகரித்து சுகாதாரக் கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் நோய் அச்சத்தில் உள்ளனர். விருதுநகர் நகராட்சியின் 36 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று குப்பை பெறப்படுகிறது. இதனால் குப்பை பாயின்ட்கள் குறைய,,தெருவோர குப்பை அகற்றப்பட்டு எச்சரிக்கை போர்டுகளும்

விருதுநகர்- விருதுநகர் நகராட்சி பகுதிகளில் மீண்டும் உருவெடுக்கும் குப்பை பாயின்ட்களால் பன்றிகள், நாய்கள் தொல்லை அதிகரித்து சுகாதாரக் கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் நோய் அச்சத்தில் உள்ளனர். விருதுநகர் நகராட்சியின் 36 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று குப்பை பெறப்படுகிறது. இதனால் குப்பை பாயின்ட்கள் குறைய,,தெருவோர குப்பை அகற்றப்பட்டு எச்சரிக்கை போர்டுகளும் வைக்கப்பட்டன. நீண்ட நாள் தலைவலியாக இருந்த பாத்திமாநகர் கவுசிகா நதி பாலம், அருப்புக்கோட்டை பாலம் கீழ்ப்பகுதி, அல்லம்பட்டி, என்.என்., ரோடு, கணேஷ்நகர் முகப்பு பகுதிகளில் எச்சரிக்கைக்கு பின்னும் குப்பை குவிந்தது . சுகாதார ஆய்வாளர்களின் தொடர் கண்காணிப்பால் தற்போது குப்பை கொட்டப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது மீண்டும் பல்வேறு இடங்களில் குப்பை பாயின்ட்கள் உருவாக துவங்கி விட்டன. குறிப்பாக நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு நாகம்மாள் கோயில் அருகே கணேஷ்நகர் முகப்பு பகுதியில் மீண்டும் குப்பை கொட்டப்பட்டு குப்பை பாயின்ட் உருவெடுத்துள்ளன. அப்பகுதியில் பன்றிகள் ஆக்கிரமித்துள்ளன. விருதுநகர் நகராட்சி நுழைவுபகுதியில் குப்பைபாயின்டுடன் பன்றிகளும் மேய்வதால் அவ்வழியாக செல்வோர் முகம் சுளிக்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் இதன் மூலம் நோய் அச்சம் அதிகரித்துள்ளது.ஆங்காங்கு முளைக்கும் குப்பை பாயின்ட்களை கட்டுப்படுத்துவதுடன் இதற்கு காரணமான நபர்கள் , குப்பை கொட்டுவோர் மீது அபராத நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடவடிக்கை எடுக்கப்படும் குப்பை பாயின்ட்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.இதுபோல் நகரில் உலா வரும் பன்றிகளும் கட்டுப்படுத்தப்படும்.சையது முஸ்தபா கமால், நகராட்சி கமிஷனர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X