அலட்சியம்: மாவட்டத்தில் அதிகரிக்கும் கொசுக்கள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
விருதுநகர் - விருதுநகர் மாவட்டத்தில் பருவமழை நேரங்களில் டெங்கு நோய் பரவுவது ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது. இதற்கு காரணமாக கொசு ஒழிப்பு பணியை முறைப்படுத்த தவறுவதால், ஆங்காங்கு தேங்கும் மழை நீரில் இதன் உற்பத்தியும் அதிகரிக்கிறது.மாவட்ட மக்கள் ஆண்டு தோறும் டெங்குவால் அதிகம் பாதிக்கின்றனர். மழை காலங்களில் ரோட்டோரம், தெருக்கள்,குடியிருப்புகளை சுற்றி மழை நீர்

விருதுநகர் - விருதுநகர் மாவட்டத்தில் பருவமழை நேரங்களில் டெங்கு நோய் பரவுவது ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது.

இதற்கு காரணமாக கொசு ஒழிப்பு பணியை முறைப்படுத்த தவறுவதால், ஆங்காங்கு தேங்கும் மழை நீரில் இதன் உற்பத்தியும் அதிகரிக்கிறது.மாவட்ட மக்கள் ஆண்டு தோறும் டெங்குவால் அதிகம் பாதிக்கின்றனர். மழை காலங்களில் ரோட்டோரம், தெருக்கள்,குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்குகிறது. இதன் நீரை உடனுக்குடன் அகற்றாது மாத கணக்கில் தேங்குவதால் இங்கு கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புகளில் கொட்டமடிக்கின்றன. இதன் மூலம் டெங்கு மட்டுமன்றி கொடிய நோய்களும் உருவாகின்றன. டெங்கு பரவல் அதிகரிக்கும்போது வீடுகள் தோறும் சென்று சோதனை செய்து அபராதம் விதிப்பது, விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தி துறையினரும் தங்களது கடைமையை முடித்து கொள்கின்றனர். திறந்த தொட்டிகளில் நீர் சேமித்து வைத்திருக்கும் வீடு,வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் துறை அதிகாரிகள் , ரோட்டோரம்,காலி மனைகள் , குடியிருப்புகளை சூழந்துள்ள மழை நீர் அகற்றாத துறை மீது ஏன் நடவடிக்கை இல்லை. இதை முறைப்படுத்தினாலே டெங்கு பரவலுக்கு காரணமான கொசுக்களை முற்றிலும் ஒழிக்க முடியும். பல இடங்களில் இன்று வரை சாக்கடை ,வடிகால் அமைக்கப்படாமலே உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குடியிருப்பை சுற்றி தேங்கி நிற்கிறது. இதுபோல் சுகாதாரக் கேடு நிலவும் பகுதிகளில் குடியிருப்போர் ஆண்டுதோறும் டெங்குவால் பாதிப்பை சந்திக்கின்றனர்......................வசதிகள் இல்லாததால் ஆபத்து பள்ளம் மேடான ரோடு, புதர் மண்டிய கால்வாய், சாக்கடை வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரில்தான் கொசு உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது. கால்வாய் இல்லாத பகுதிகளில் கால்வாய் அமைத்தால் கொசு உற்பத்தியை தடுக்கலாம்.இதோடு அவ்வபோது கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.நாகேந்திரன், தனியார் ஊழியர்,விருதுநகர்.................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X