ஆர்.எம்.கே.வி.,க்கு வருமான வரி விருது | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எம்.கே.வி.,க்கு வருமான வரி விருது

Added : நவ 25, 2021
Share
சென்னை:'நேர்மையாக வரி செலுத்துபவர்' என்ற விருதை, ஆர்.எம்.கே.வி., டெக்ஸ்டைல் மற்றும் ஆர்.எம்.கே.வி., குழும இயக்குனர் மாணிக்கவாசகத்திற்கு வழங்கி, வருமான வரித்துறை கவுரவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை சார்பில், நேர்மை தவறாது வரி செலுத்துவோரை கவுரவிக்கும் விழா, திருநெல்வேலியில் நேற்று நடந்தது.இந்த விழாவில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த
 ஆர்.எம்.கே.வி.,க்கு வருமான வரி விருது

சென்னை:'நேர்மையாக வரி செலுத்துபவர்' என்ற விருதை, ஆர்.எம்.கே.வி., டெக்ஸ்டைல் மற்றும் ஆர்.எம்.கே.வி., குழும இயக்குனர் மாணிக்கவாசகத்திற்கு வழங்கி, வருமான வரித்துறை கவுரவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை சார்பில், நேர்மை தவறாது வரி செலுத்துவோரை கவுரவிக்கும் விழா, திருநெல்வேலியில் நேற்று நடந்தது.இந்த விழாவில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வரி செலுத்துவோர் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில், ஆர்.எம்.கே.வி., டெக்ஸ்டைல் மற்றும் ஆர்.எம்.கே.வி., குழும இயக்குனர் மாணிக்கவாசகத்திற்கு, 'நேர்மையாக வரி செலுத்துபவர்' என்ற விருது வழங்கப்பட்டது.
இதே போல, தர்மசங்கர அய்யர் பட்டய கணக்காளர் நிறுவனத்தை சேர்ந்த, ஆடிட்டர் ஆர்.ராமகிருஷ்ண அய்யருக்கு, 'நேர்மையாக தொழில்புரிவோர்' விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு மதுரை வருமான வரி முதன்மை கமிஷனர் பூபால் ரெட்டி விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X