சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரவெடி அனுமதி கோரி பெண்கள் போராட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சிவகாசி--சரவெடி தயாரிக்க அனுமதி கோரி பட்டாசு பெண் தொழிலாளர்கள் மீனம்பட்டியில் போராட்டத்தில் குதித்தனர்.சிவகாசி, சுற்றுப்பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. நேரடியாக 3 லட்சம் பேரும் மறைமுகமாக 5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். பொதுவாகவே தீபாவளி முடிந்து 10 நாட்களிலேயே பட்டாசு ஆலைகள் வழக்கம்போல் உற்பத்தி பணியை துவங்கி விடும். தீபாவளி முடிந்து 20 நாட்கள் கடந்தும் எந்த

சிவகாசி--சரவெடி தயாரிக்க அனுமதி கோரி பட்டாசு பெண் தொழிலாளர்கள் மீனம்பட்டியில் போராட்டத்தில் குதித்தனர்.சிவகாசி, சுற்றுப்பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. நேரடியாக 3 லட்சம் பேரும் மறைமுகமாக 5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். பொதுவாகவே தீபாவளி முடிந்து 10 நாட்களிலேயே பட்டாசு ஆலைகள் வழக்கம்போல் உற்பத்தி பணியை துவங்கி விடும். தீபாவளி முடிந்து 20 நாட்கள் கடந்தும் எந்த ஆலையும் செயல்படவில்லை. உச்சநீதிமன்றம் சரவெடி தயாரிக்கக் கூடாது, பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவினால் ஆலைகள் இயங்க வில்லை.இதனிடையே அச்சங்குளம் கிராம மக்கள், விஜயகரிசல்குளம் பட்டாசு தொழிலாளர்கள் பெயரில் சரவெடி அனுமதி கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மீனம்பட்டியில் பட்டாசு பெண் தொழிலாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். கிழக்கு எஸ்.ஐ.,க்கள் ராமநாதன், ஆத்தீஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டரிடம் மனு எழுதி கொடுங்கள் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X