பல்லடம்: பல்லடம் அரசு பெண்கள் பள்ளியில் உள்ள பாம்பு பண்ணையில் இருந்து, ஆசிரியர் மாணவியரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.பல்லடம், மங்கலம் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 600க்கும் அதிகமான மாணவியருக்கு இங்கு படிக்கின்றனர். பள்ளி வளாகத்துக்குள் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நிலத்துக்கு கீழ் எலிகள் ஏற்படுத்திய உள்ள பொந்துகளில் குடும்பத்துடன் வசிக்கின்றன. கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், பள்ளி வளாகத்துக்குள் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது, ஆசிரியர்கள், மாணவியரை பீதியடைய செய்துள்ளது.நேற்று காலை, பள்ளி வளாகத்துக்குள்.நுழைந்த சாரை மற்றும் நாகப்பாம்புகள் ஆசிரியர், மாணவியருக்கு மிரட்டல் விடுத்தன.
தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்தனர். பாம்புகள் பொந்துக்குள் சென்று மறைந்தன. ஐந்து அடி நீளமுள்ள சாரை பாம்பு மட்டும் பிடிபட்டது.பெற்றோர் கூறியதாவது:பள்ளிக்கு முறையான சுற்றுச்சுவர் கிடையாது. பள்ளி அருகே புதர்கள் நிரம்பியும், ஏராளமான எலி பொந்துகளும் உள்ளன. அவற்றில், பாம்புகள் கூட்டம் கூட்டமாக வசிக்க வாய்ப்பு உள்ளது. மழை காரணமாக, பாம்புகள் அவ்வப்போது வெளியே வந்து அச்சுறுத்துகின்றன.கடந்த காலங்களிலும், ஏராளமான பாம்புகள் பிடிபட்டுள்ளன. இதனால், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளிக்கு முறையாக சுற்றுசுவர் ஏற்படுத்தி, பொந்துகளை மூடவும் பாம்புகளை காட்டுப்பகுதியில் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE