செய்தி செய்தி

தமிழ்நாடு

சிறப்பு கடன் திட்டம்; பயன்படுத்த அழைப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: சிறுபான்மையின மக்கள், 'டாம்கோ' சிறப்பு கடன் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையின மக்களுக்கான கடன் திட்டங்களுக்கு, 1.55 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு, பல்வேறு கடன் திட்ட உதவி வழங்கப்படுகிறது.கடன் திட்டங்களில்

திருப்பூர்: சிறுபான்மையின மக்கள், 'டாம்கோ' சிறப்பு கடன் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையின மக்களுக்கான கடன் திட்டங்களுக்கு, 1.55 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு, பல்வேறு கடன் திட்ட உதவி வழங்கப்படுகிறது.கடன் திட்டங்களில் விண்ணப்பிக்க வசதியாக, தாலுகா தோறும் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தாராபுரத்தில், நகர கூட்டுறவு வங்கியில், இன்று (25ம் தேதி) காலையும், உடுமலை நகர வங்கியில் மதியமும் முகாம் நடக்கிறது.மடத்துக்குளம், ராமேகவுண்டன்புதுார் கூட்டுறவு சங்கத்தில், நாளை (26ம் தேதி) காலையில் முகாம் நடக்க உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 60 வயதுக்கு உட்பட்ட சிறுபான்மையினர், கடன் திட்டங்களில் விண்ணப்பிக்கலாம்.முகாமில் விடுபட்டவர்கள், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று, விண்ணப்பம் பெற்று, விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் உதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம், கிராமப்புறத்தில், 98 ஆயிரம் ரூபாயாகவும், நகர்ப்புறத்தில், 1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சில திட்டங்களில், வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள், ஜாதிச்சான்று, ஆதார் சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று, தொழில் துவங்க இருக்கும் விவரங்களுடன், முகாமில் பங்கேற்கலாம். 'டாம்கோ' திட்ட முகாமில், சமூக இடைவெளியுடன் பங்கேற்று, விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 0421 2999130 என்ற எண்களிலும், dbcwotpr@gmail.com என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X