பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்..

Added : நவ 25, 2021
Share
Advertisement
விருதுநகர்: கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: நாளை(நவ. 26) சிவகாசி வெள்ளூர், அருப்புக்கோட்டை கீழ்க்குடி, விருதுநகர் செங்குன்றாபுரம், காரியாபட்டி ஆவியூர், திருச்சுழி உ.கிடாக்குளம், சாத்துார் பேரையம்பட்டி, ராஜாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம், வெம்பக்கோட்டை கீழராஜகுலராமன், ஸ்ரீவில்லிபுத்துார் வெங்கடேஸ்வராபுரம், வத்திராயிருப்பு களத்துார் கிராமங்களில் விவசாயிகள்,

விருதுநகர்: கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: நாளை(நவ. 26) சிவகாசி வெள்ளூர், அருப்புக்கோட்டை கீழ்க்குடி, விருதுநகர் செங்குன்றாபுரம், காரியாபட்டி ஆவியூர், திருச்சுழி உ.கிடாக்குளம், சாத்துார் பேரையம்பட்டி, ராஜாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம், வெம்பக்கோட்டை கீழராஜகுலராமன், ஸ்ரீவில்லிபுத்துார் வெங்கடேஸ்வராபுரம், வத்திராயிருப்பு களத்துார் கிராமங்களில் விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது, என்றார்.

.............

இன்று 11வது தடுப்பூசி முகாம்

விருதுநகர்: கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: மாவட்டத்தில் இன்று காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதி அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் 11 வது தடுப்பூசி முகாம்கள் நடக்க உள்ளது ,என்றார்.

...............

அம்பேத்கர் விருதுக்கு அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: 2021ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது 2022 திருவள்ளுவர் நாளில் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர், ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள் அதற்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெறலாம், என்றார்.

...............

விதை மாதிரி இலக்கு

விருதுநகர்: விதை ஆய்வு துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் : நடப்பு ராபி பருவத்தில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகம் செய்வதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பயிர் விதைகளில் இருந்து குறைந்த பட்சம் 75 விதை மாதிரிகள் சேகரித்து ,விதை பரிசோதனைக்கு அனுப்பும் பணி நவ. 28 வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விதை ஆய்வாளரும் குறைந்த பட்சம் 75 விதை மாதிரிகள் எடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X