நடை பயணத்திற்கு முயன்ற எம்.பி., எம்.எல்.ஏ., கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடை பயணத்திற்கு முயன்ற எம்.பி., எம்.எல்.ஏ., கைது

Added : நவ 25, 2021
Share
சிவகாசி- -பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து சிவகாசியில் மக்கள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ள முயன்ற காங்., எம்.பி., மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ., அசோகன் உட்பட 360 பேர் கைது செய்யப்பட்டனர்.சிவகாசி சட்டசபை தொகுதி காங்., சார்பில் நடை பயணத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் மாட்டுவண்டியில் சிலிண்டரை வைத்து போராட்டம் நடத்தினர்.

சிவகாசி- -பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து சிவகாசியில் மக்கள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ள முயன்ற காங்., எம்.பி., மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ., அசோகன் உட்பட 360 பேர் கைது செய்யப்பட்டனர்.சிவகாசி சட்டசபை தொகுதி காங்., சார்பில் நடை பயணத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் மாட்டுவண்டியில் சிலிண்டரை வைத்து போராட்டம் நடத்தினர். இதன்பின் போலீசார் அனுமதியை மீறி கோஷமிட்டப்படி நடை பயணத்திற்கு முயற்சித்தனர். டவுன் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். அப்போது கட்சியினர் சிலர் கூட்டணியில் உள்ள தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர்.மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாவது: நடை பயணத்திற்கு நேற்று முன்தினம் போலீசார் அனுமதி கொடுத்த நிலையில் நேற்று திடீரென அனுமதி மறுத்தனர். விருதுநகரில் அனுமதி கொடுத்த நிலையில் இங்கு மேலிட நிர்பந்தத்தால் மறுக்கப்பட்டுள்ளது. பட்டாசின் மேல் வெறுப்பு இருப்பதால் மத்தியரசு தடை மேல் தடை கொண்டு வருகிறது,என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X