தொழிலாளர் பணி நிரந்தரம் தொ.மு.ச., முதல்வரிடம் மனு| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் பணி நிரந்தரம் தொ.மு.ச., முதல்வரிடம் மனு

Added : நவ 25, 2021
Share
திருப்பூர்: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரை, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, தொ.மு.ச., முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது.திருப்பூர் வந்திருந்த, தமிழக முதல்வரிடம், மின்வாரிய தொ.மு.ச., நிர்வாகிகள் கொடுத்த மனு:கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, மின்வாரியத்தில், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். விபத்து ஏற்படும் போது, எவ்வித நிவாரணமும்

திருப்பூர்: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரை, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, தொ.மு.ச., முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது.திருப்பூர் வந்திருந்த, தமிழக முதல்வரிடம், மின்வாரிய தொ.மு.ச., நிர்வாகிகள் கொடுத்த மனு:கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, மின்வாரியத்தில், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். விபத்து ஏற்படும் போது, எவ்வித நிவாரணமும் கிடைப்பதில்லை.முன்னறிவிப்பு இல்லாமல், பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர் உள்ளனர். அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.முக்கியத்துவம் வாய்ந்த, ஒயர்மேன், உதவியாளர் பணியிடங்கள், பழுதுநீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு பணிகளில், பெரும்பாலும், ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றுகின்றனர். ஒப்பந்த தொழிலாளர் குடும்ப நலனை கருத்தில்கொண்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X