திருப்பூர்: திருப்பூர், பல்லடம் பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்வில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மநாபன் அறிக்கை:பல்லடம், சூலுார் மற்றும் அவிநாசி சட்டசபை தொகுதிகளில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் இன்றும் நாளையும் பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெறவுள்ளனர்.மக்களை நாடிடும் நிகழ்ச்சி 25ம் தேதி (இன்று) காலை முதல் மாலை வரை பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சியின் 10 வார்டுகளிலும், அவிநாசி பேரூராட்சியிலும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன.26ம் தேதி (நாளை) காலை முதல் பிற்பகல் வரை பல்லடம் நகராட்சி பகுதியிலும், பிற்பகல் சாமளாபுரம் பேரூராட்சி பகுதியிலும் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து எழுத்துபூர்வமாக மனுக்கள் அளிக்கலாம்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE