பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ.4,626 கோடி: மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை

Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை சீரமைக்க, 4,626 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழுவினரும், தங்கள் ஆய்வை முடித்து டில்லி திரும்பினர். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜிவ் சர்மா
 வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ.4,626 கோடி: மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை

சென்னை:'தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை சீரமைக்க, 4,626 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழுவினரும், தங்கள் ஆய்வை முடித்து டில்லி திரும்பினர். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில், ஆறு பேர் குழுவை மத்திய அரசு அனுப்பியது.
இக்குழுவில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் விஜய் ராஜ்மோகன்; மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அலுவலர் ரனன் ஜெய்சிங்; ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலர் வரபிரசாத். நிதி அமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல்; நீர்வள அமைச்சக இயக்குனர் தங்கமணி; எரிசக்தி துறை உதவி இயக்குனர் பவ்யா பாண்டே ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
மத்திய குழுவினர் இம்மாதம் 21ம் தேதி சென்னை வந்தனர். அன்றைய தினம், தலைமை செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.தமிழக அதிகாரிகள் வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கினர். அதன்பின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், வெள்ள பாதிப்பு புகைப்படங்களை பார்வையிட்டனர்.


எங்கெல்லாம் ஆய்வு?

மறுநாள் குழுவினர் இரு பிரிவாக பிரிந்து, ஒரு குழுவினர் கன்னியாகுமரி மாவட்டம் சென்றனர். மற்றொரு குழுவினர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்; மாலை புதுச்சேரி சென்றனர்.கன்னியாகுமரி சென்ற குழுவினர், மறுநாள் வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். புதுச்சேரி சென்ற குழுவினர், மறுநாள் டெல்டா மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டனர்.


முதல்வருடன் சந்திப்பு

இரு குழுவினரும் சென்னை திரும்பினர். தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.அப்போது, அமைச்சர்கள் நேரு, வேலு, ராமச்சந்திரன், தலைமை செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, நிதித்துறை செயலர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மத்திய குழுவினர் தங்கள் பணியை முடித்து, மாலை டில்லி திரும்பினர்.குழு உறுப்பினர் விஜய் ராஜ்மோகன் கூறுகையில்,''வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்யும் பணியை முடித்துள்ளோம். கூடிய விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை அளிப்போம்,'' என்றார்.


கூடுதல் நிதி

அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது.இதில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க 549.83 கோடி ரூபாய்; நிரந்தரமாக சீரமைக்க 2,080 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது.
அதன்பின் மழை தொடர்ந்தது, பாதிப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போதைய சேதங்களை சேர்த்து, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு 1,071 கோடி ரூபாய்; நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு 3,555 கோடி ரூபாய் என, மொத்தம் 4,626 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
25-நவ-202103:43:53 IST Report Abuse
BASKAR TETCHANA ஆமாம் வெல்ல நிவாரண தொகையாக மத்திய அரசிடம் 4626 கோடி கேட்டுள்ளோம் மத்திய அரசு எவ்வளவு கொடுக்கும் என்று தெரிய வில்லை எப்படியும் ஒரு 450 கோடி கொடுப்பார்கள். அதை வைத்து தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம். எனக்கு தேவை முக்கியமான காரியம் ஒன்று முடித்தாகணும். நிவாரண நிதியை வைத்து என் அப்பாவுக்கு நினைவு மண்டபத்தையும் நூலகத்தையும் ஒரு 114 கோடியில் கட்டி விட வேண்டும். அதில் என் பெயர் போன் எழுத்துக்களால் எழுத வேண்டும் என் நீண்டநாள் கனவு. இதை வைத்தே இந்த தமிழ் மக்களுக்கு ஜிலேபி கொடுத்து விடலாம். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் என் பெயர் தென்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X