ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்

Added : நவ 25, 2021
Share
சென்னை:பள்ளி கல்வி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழக ஊரக பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறலாம். கிராமப்புற ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு ஜன., 30ல் நடக்கிறது.

சென்னை:பள்ளி கல்வி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழக ஊரக பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறலாம்.
கிராமப்புற ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு ஜன., 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், டிச.,6 முதல் டிச.,12 வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதை மாணவர்களுக்கு கொடுத்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய் சான்றிதழும் பெற வேண்டும். டிச.,14க்குள் மாணவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, டிச., 20க்குள் ஆன்லைனில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரையிலும் படிப்பதற்கான உதவித்தொகை, அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X