செய்தி செய்தி

தமிழ்நாடு

கடப்பாறையால் தாக்கி மனைவி கொலை: தலைமறைவான கணவனுக்கு போலீசார் வலை

Added : நவ 25, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மனைவியை கடப்பாறையால் அடித்து கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்வெள்ளகோவில் அருகே நடுப்பாளையம், நல்லாநாயக்கர் என்பவரின் மகன் குருநாதன், 60. இவரது மனைவி பூங்கொடி, 55. தம்பதிக்கு, விநாயகன், சாந்தி என இரு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.குருநாதனும், பூங்கொடியும் நடுப்பாளையத்தில் உள்ள



வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மனைவியை கடப்பாறையால் அடித்து கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்வெள்ளகோவில் அருகே நடுப்பாளையம், நல்லாநாயக்கர் என்பவரின் மகன் குருநாதன், 60. இவரது மனைவி பூங்கொடி, 55. தம்பதிக்கு, விநாயகன், சாந்தி என இரு குழந்தைகள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.குருநாதனும், பூங்கொடியும் நடுப்பாளையத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். குருநாதன், கடந்த 3 மாதமாக வேலைக்கு செல்லாமல், மனநிலை பாதித்த நிலையில் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.பூங்கொடி நேற்று காலை, 9:00 மணிக்கு மோளகவுண்டன் வலசில் உள்ள நுால் மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 6.00 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.அப்போது, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆவேசமடைந்த குருநாதன், கடப்பாறையால், பூங்கொடியை தாக்கியுள்ளார்.தலையில் பலத்த காயமேற்பட்டு வீட்டின் முன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.இரவானதால், கணவர் குருநாதன் வீட்டருகே உள்ள புதரினுள் தலைமறைவாகி விட்டார். சம்பவ இடத்தை பார்வையிட்ட டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாகியுள்ள குருநாதனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X