கன்னிவாடி கால்நடைகளுக்கு காணை நோய் பாதிப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
கன்னிவாடி-ரெட்டியார்சத்திரம், கன்னிவாடியில் காணை நோயால் கால்நடைகள் பாதிப்பது அதிகரித்துள்ளது.ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் விவசாய பணிகளில் கால்நடைகளின் பயன்பாடு குறைந்ததால், சில ஆண்டுகளாக கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. பால் உற்பத்தி தொழில் ஆர்வத்தால், 2 ஆண்டுகளாக பலரும் பசு வளர்ப்பை துவக்கியுள்ளனர்.டி.பண்ணைப்பட்டி, கே.புதுக்கோட்டை,

கன்னிவாடி-ரெட்டியார்சத்திரம், கன்னிவாடியில் காணை நோயால் கால்நடைகள் பாதிப்பது அதிகரித்துள்ளது.ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் விவசாய பணிகளில் கால்நடைகளின் பயன்பாடு குறைந்ததால், சில ஆண்டுகளாக கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. பால் உற்பத்தி தொழில் ஆர்வத்தால், 2 ஆண்டுகளாக பலரும் பசு வளர்ப்பை துவக்கியுள்ளனர்.டி.பண்ணைப்பட்டி, கே.புதுக்கோட்டை, கொத்தப்புள்ளி, சில்வார்பட்டி, முத்தனம்பட்டி, குட்டத்துப்பட்டி, கசவனம்பட்டி, தர்மத்துபட்டி, அனுமந்தராயன்கோட்டை பகுதியில் பலர் கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். சமீபத்திய சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கால்நடைகளில் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. வாய்ப்புண் காரணமாக, உணவு எடுத்துக் கொள்ள சிரமப்படுகின்றன. கிராமங்களில் சிகிச்சை வசதியின்றி நாட்டு மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.பால் உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், ''கால்நடை பராமரிப்பு துறை குக்கிராமங்களில் முகாம் நடத்த வேண்டும். அதற்கு முன் சம்பந்தப்பட்ட பகுதியில் அறிவிப்பு செய்ய வேண்டியது அவசியம்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X