பொது செய்தி

தமிழ்நாடு

வாய்க்கால் சிதைந்ததால் வரத்துநீரை மறந்த குளம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
எரியோடு-எரியோடு மறவபட்டியில் வரத்து வாய்க்கால் சீர்குலைந்துள்ளதால் படேல் தொட்டயகவுடர் குளம் நீர் சேகரிக்கும் வாய்ப்பை இழந்துள்ளது.பல நுாறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பஞ்சங்களை அனுபவித்த முன்னோர்கள் மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை சேமிக்க ஏரி, கண்மாய், குளம், குட்டை என நீர்நிலைகளை உருவாக்கி பராமரித்தனர். தற்போது புதிதாக குளங்களை உருவாக்காவிட்டாலும் இருப்பதை

எரியோடு-எரியோடு மறவபட்டியில் வரத்து வாய்க்கால் சீர்குலைந்துள்ளதால் படேல் தொட்டயகவுடர் குளம் நீர் சேகரிக்கும் வாய்ப்பை இழந்துள்ளது.பல நுாறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பஞ்சங்களை அனுபவித்த முன்னோர்கள் மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை சேமிக்க ஏரி, கண்மாய், குளம், குட்டை என நீர்நிலைகளை உருவாக்கி பராமரித்தனர். தற்போது புதிதாக குளங்களை உருவாக்காவிட்டாலும் இருப்பதை பாதுகாத்து பராமரிப்பதில் அரசு மற்றும் மக்களிடம் அக்கறை, விழிப்புணர்வு உள்ளதா என்றால் அது கேள்விக்குறியே. இதனால் பல குளங்கள் நீர் வரத்து இல்லாமலும், வரும் நீரை சேமிக்காத வகையிலும் பாழ்பட்டுக் கிடக்கின்றன.இந்த வகையில் நீர் வரத்து வாய்ப்பு இருந்தும் அரசு துறைகளின் அலட்சியத்தால் வறண்டு கிடக்கும் குளங்களில் ஒன்றாக எரியோடு மறவபட்டி படேல் தொட்டயகவுடர் குளம் உள்ளது. வடமதுரை ஒன்றியத்தில் பாகாநத்தத்தை அடுத்த மாங்கோம்பை பகுதி மலைகளில் சேகரமாகும் மழை நீர் துாங்கணம்பட்டி குளத்திற்கு வருகிறது.இதன் மறுகால் மூலம் எரியோடு பேரூராட்சியில் நாடார் குளம், வண்ணார் குளம் நிரம்பி தொடர்ந்து வெளியேறும் நீர் மறவபட்டி படேல் தொட்டய கவுடர் குளத்தை சென்றடையும். இதற்காக வண்ணார் குளத்தில் இருந்து கரூர் ரோட்டிற்கு வலப்பக்கம் அமைக்கப்பட்ட வாய்க்கால் பாதை குண்டாம்பட்டி பிரிவு அருகே பாலம் வழியே சென்று ரயில் பாலத்தையும் கடந்து மறவபட்டி குளத்தில் சேர்கிறது.சமீபத்தில் நடந்த திண்டுக்கல் - கரூர் ரோடு விரிவாக்கத்தின்போது நடந்த பால கட்டுமான பணியில் இந்த வாய்க்கால் சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் வண்ணார் குளத்தில் வெளியேறும் நீர் நடுவழியில் திசை மாறி வேறு பகுதிக்கு செல்கிறது. இதனால் குளத்திற்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய நீர் வருவதில்லை. இதுபற்றி விவசாயிகள் கூறுவதென்ன:வாய்க்கால் சிதைந்ததால் பாதிப்புநந்தகோபால், மறவபட்டி: மறவபட்டி தொட்டயகவுடர் குளத்தில் 9 ஏக்கர் பரப்பில் நீர் தேங்கி நிற்கும். இக்குளம் மூலம் ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இக்குளத்தில் மறுகால் பாய்ந்து மணியகாரன்பட்டி குளத்திற்கு செல்லும். திண்டுக்கல் - கரூர் ரோடு அகலப்படுத்தும் பணியில் இடைப்பட்ட பகுதியில் பாலத்தை விரிவுபடுத்தினர். அப்போது வாய்க்கால் பாதை சிதைக்கப்பட்டது. இதனால் இங்கு தண்ணீர் வருவதே கிடையாது. வாய்க்காலை சீரமைத்து மறவபட்டி குளத்திற்கு தண்ணீர் செல்ல வழிகாண வேண்டும்.சீமைக்கருவேல மரங்களால் பாதிப்பு டி.பரமேஸ்வரன், மறவபட்டி: கடந்த பல ஆண்டுகளாகவே மறவபட்டி குளத்திற்கான வாய்க்கால் பராமரிக்கப்படவில்லை. வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்பு திட்டத்தை வலியுறுத்தும் அரசு, ஒரு ஊருக்கே மழை நீரை சேகரித்து வழங்கும் இக்குளத்தின் விஷயத்தில் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வில்லை. பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் குளம் முழுவதும் சீமை கருவேல மரங்களாக வளர்ந்துள்ளன. குளத்தில் சேகரமாகும் சொற்ப நீரும் சீமை கருவேல மரங்களால் விரைவாக உறிஞ்சப்படும் நிலை உள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X