ஜல்லிக்கற்கள் பல்லிளிக்கும் சாலைகள்: வாகன ஓட்டிகள் சிரமம்| Dinamalar

ஜல்லிக்கற்கள் பல்லிளிக்கும் சாலைகள்: வாகன ஓட்டிகள் சிரமம்

Added : நவ 25, 2021
Share
நத்தம்--நத்தம் அருகே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து பழுதடைந்த ரோடால் வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.நத்தம் - மதுரை நான்கு வழி சாலையில் வத்திபட்டியில் இருந்து வலையபட்டி-, காசம்பட்டி செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோடு அருக்கம்பட்டி, கருங்காலக்குடி வழியாக திருச்சி நான்கு வழிச்சாலைக்கு செல்கிறது. இந்த 5 கி.மீ சாலை அமைத்து சில ஆண்டுகளே

நத்தம்--நத்தம் அருகே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து பழுதடைந்த ரோடால் வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.நத்தம் - மதுரை நான்கு வழி சாலையில் வத்திபட்டியில் இருந்து வலையபட்டி-, காசம்பட்டி செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோடு அருக்கம்பட்டி, கருங்காலக்குடி வழியாக திருச்சி நான்கு வழிச்சாலைக்கு செல்கிறது. இந்த 5 கி.மீ சாலை அமைத்து சில ஆண்டுகளே ஆகிறது.இருப்பினும் தற்போது ரோட்டில் தார் இல்லாமல் ஜல்லிக் கற்கள் அனைத்தும் தனித்தனியாக பெயர்ந்துள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத வண்ணம் உள்ளது. இந்தச் சாலை வழியாக போக்குவரத்து குறைந்துவிட்டது. விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். ரோட்டை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X