சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தல் 6 மாதத்தில் 3,897 பேரை அள்ளியது போலீஸ்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக, ஆறு மாதத்தில் 3,897 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு, ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கடத்தும் கும்பல் குறித்து, சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு, டி.ஜி.பி., ஆபாஷ்குமார் தலைமையிலான போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், மாநிலம் முழுதும் ஆறு

சென்னை:ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக, ஆறு மாதத்தில் 3,897 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு, ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கடத்தும் கும்பல் குறித்து, சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு, டி.ஜி.பி., ஆபாஷ்குமார் தலைமையிலான போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாநிலம் முழுதும் ஆறு மாதங்களில், பொது மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக, 3,804 வழக்குகள் பதிவு செய்து, 3,897 பேரை கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 631 வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், ௨,628 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றி உள்ளனர்.இதில், ஒரே சமயத்தில் 10 டன்னுக்கு மேலாக ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக, 51 வழக்குகள் பதிவு செய்து 76 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்;
901 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றி உள்ளனர்.கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் விற்றது தொடர்பாக 139 வழக்குகள் பதிவு செய்து 142 பேரை கைது செய்துள்ளனர்; 15 ஆயிரத்து 780 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்துள்ளனர்.கலப்பட டீசல் விற்றது தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்து 91 பேரை கைது செய்துள்ளனர்.
3.24 லட்சம் லிட்டர் கலப்பட டீசல்; 39 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர். மானிய விலையில் விற்கப்படும் காஸ் சிலிண்டரை தவறுத லாக வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது தொடர்பாக, 347 வழக்குகள் பதிவு செய்து 345 பேரை கைது செய்து உள்ளனர்.இவர்களிடம் இருந்து 420 காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X