ஒட்டன்சத்திரத்தில் தொற்று நோய் பரவும் அபாயம்| Dinamalar

ஒட்டன்சத்திரத்தில் தொற்று நோய் பரவும் அபாயம்

Added : நவ 25, 2021
Share
ஒட்டன்சத்திரம்- -ஒட்டன்சத்திரம் நகராட்சி புதிய பைபாஸ் ரோடு தெற்கு பகுதியில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டின் தெற்குப்பகுதியில் நகராட்சிக்குட்பட்ட செல்லப்ப கவுண்டன் புதுார் உள்ளது. இப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் இப்பகுதியை சூழ்ந்தது.போதிய

ஒட்டன்சத்திரம்- -ஒட்டன்சத்திரம் நகராட்சி புதிய பைபாஸ் ரோடு தெற்கு பகுதியில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டின் தெற்குப்பகுதியில் நகராட்சிக்குட்பட்ட செல்லப்ப கவுண்டன் புதுார் உள்ளது. இப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் இப்பகுதியை சூழ்ந்தது.போதிய வடிகால் வசதியின்றி தண்ணீர் வெளியேற வழியில்லாமல் இன்றுவரை தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி, அருகில் குடியிருப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டுமென்றால், இங்கு புதிய பாலம் கட்டும் பணியால் அதற்கும் வழியின்றி உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சியினர், இப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதியை விரைந்து ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X