பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைத் துறையினர் ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி

Added : நவ 25, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை--தினமலர் செய்தி எதிரொலியால் கால்நடை துறையினர் நிலக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர்.நிலக்கோட்டையில் கால்நடைகளுக்கு காணை நோய் பரவி இரண்டு நாட்களில் மூன்று பசுக்கள் இறந்துள்ளன. நிலக்கோட்டை தாலுகாவில் 9 மருத்துவமனைகளுக்கு ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால் கிராமங்களில் உள்ள கால்நடைகளை கண்காணிக்க முடியவில்லை. உதவியாளர்கள் கால்நடைகளுக்கு மருத்துவ உதவி

நிலக்கோட்டை--தினமலர் செய்தி எதிரொலியால் கால்நடை துறையினர் நிலக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர்.நிலக்கோட்டையில் கால்நடைகளுக்கு காணை நோய் பரவி இரண்டு நாட்களில் மூன்று பசுக்கள் இறந்துள்ளன. நிலக்கோட்டை தாலுகாவில் 9 மருத்துவமனைகளுக்கு ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால் கிராமங்களில் உள்ள கால்நடைகளை கண்காணிக்க முடியவில்லை. உதவியாளர்கள் கால்நடைகளுக்கு மருத்துவ உதவி செய்து வருகின்றனர். மழை அதிகரிப்பதோடு நோயும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தினமலர் நாளிதழில் காணை நோய்க்கு பசு இறந்த செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட நோய் புலனாய்வு உதவி இயக்குநர் விஜயகுமார், கொடைக்கானல் உதவி இயக்குனர் பிரபு ஆகியோர் ஆய்வு செய்தனர். நோய் குணமாக மருந்து வழங்கினர். விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X