சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
நத்தம்---மதுரையில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ்சை டிரைவர் முத்துகிருஷ்ணன் ஓட்டிச் சென்றார். மதுரை-காளவாசல் பகுதியில் தனது காருக்கு வழிவிடவில்லை என்றுகூறி, முத்துக்கிருஷ்ணனை கார் டிரைவர் தாக்கினார். பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.இச்சம்பவத்தை கண்டித்து நத்தத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சட்ட உரிமைகள் கழக தொழிற்சங்கம் சார்பில்

நத்தம்---மதுரையில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ்சை டிரைவர் முத்துகிருஷ்ணன் ஓட்டிச் சென்றார். மதுரை-காளவாசல் பகுதியில் தனது காருக்கு வழிவிடவில்லை என்றுகூறி, முத்துக்கிருஷ்ணனை கார் டிரைவர் தாக்கினார். பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.இச்சம்பவத்தை கண்டித்து நத்தத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சட்ட உரிமைகள் கழக தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் குமார் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சோலைக்குமார், செயலாளர் வேலவன் முன்னிலை வகித்தனர்.அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். ஆர்பாட்டத்தால், அலங்காநல்லூர், சிங்கம்புணரி, வி.எஸ்.கோட்டை, மதுக்காரம்பட்டிக்கு இயக்கப்படும் 10க்கும் மேற்பட்ட பஸ்கள் காலை 8:00 மணி வரை இயக்கப்படவில்லை. மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X